ADDED : ஆக 23, 2010 12:46 AM
காளையார்கோவில் : காளையார்கோவில் அருகே கல்லுவெளியில் நீர், நிலவள திட்டத்தில் மண்புழு உரக்கூடம் அமைக்கும் முறை குறித்து பயிற்சி வகுப்பு நடந்தது.
செட்டிநாடு மானாவாரி ஆராய்ச்சி நிலைய உதவி பேராசிரியர் பரமசிவம் மண்புழு உரம் தயாரிப்பு, தொழில் நுட்பம் குறித்து விளக்கம் அளித்தார். உதவி இயக்குநர் (பொறுப்பு) கண்ணன், விவசாய அலுவலர்கள் ஜைநுல் பவுஜியாராணி, ஜெயசுதா, நாகசாமி, ராஜசேகரன், ராமசாமி, விவசாயி ஆப்ரகாம் பங்கேற்றனர்.