டில்லியில் ஆசியாவிலேயே மிகப் பெரிய கோர்ட்
டில்லியில் ஆசியாவிலேயே மிகப் பெரிய கோர்ட்
டில்லியில் ஆசியாவிலேயே மிகப் பெரிய கோர்ட்
ADDED : ஆக 22, 2010 10:20 AM
புதுடில்லி : டில்லியில் 6வது மாவட்ட கோர்ட் அமைக்கும் பணிகள் நிறைவடைந்துள்ளன.
இந்த கோர்ட் ஆகஸ்ட் 28ம் தேதி திறக்கப்பட உள்ளது. டில்லியின் தெற்கு மற்றும் தென் கிழக்கு மாவட்டங்களுக்கு உட்பட்ட வழக்குகள் இந்த கோர்ட்டில் விசாரிக்கப்பட உள்ளது. இந்த கோர்ட்டில் 26 சிவில் மற்றும் கிரிமினல் கோர்ட்களும் உள்ளடங்கி உள்ளன. 80 கோர்ட் அறைகள், 92 நீதிபதி அறைகளுடன் கட்டப்பட்டுள்ள இந்த கோர்ட் கட்டிடம் ஆசியாவின் மிகப் பெரிய கோர்ட் வளாகமாக கருதப்படுகிறது. மேலும் இக்கோர்ட்டில் 666 வழக்கறிஞர்கள் அறைகளும், 128 நீதிபதி தங்கும் அறைகளும் அமைக்கப்பட்டுள்ளது.


