குழந்தைகள் பாதுகாப்பில் தேவைஅக்கறை
குழந்தைகள் பாதுகாப்பில் தேவைஅக்கறை
குழந்தைகள் பாதுகாப்பில் தேவைஅக்கறை
ADDED : ஆக 23, 2010 11:37 PM
பரமக்குடி : பரமக்குடியில் கல்வி நிறுவனங்களில் நிறுத்தம் இல்லாததால் ,தெருக்கள் தேசிய நெடுஞ்சாலைகளில் முறையற்று வாகனங்கள்நிறுத்தப்படுகின்றன.
இதனால் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து பெற்றோர்கள் அச்சத்தில் உள்ளனர். பரமக்குடி நகரில் பள்ளி, கல்லூரி நிறுவனங்களும் புற்றீசல் போல் பெருகிவிட்டன. ஒவ்வொரு நிறுவனமும் தங்கள் பள்ளிகளில் குழந்தைகளை சேர்க்க நவீன வசதிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் ஒரு தாக்கமாக பெற்றோர்களின் வேலைப்பளுவை குறைக்கும் நோக்கில் அனைத்து கல்வி நிறுவனங்களும் வாகனங்களை வாங்கி வைத்துள்ளன. நகரானது குறுகிய தெருக்கள், சந்துக்களை கொண்டதாக இருப்பதால் ஒவ்வொரு பள்ளியும் தங்கள் வசதிக்கேற்ப ஆம்னி வேன்கள்முதல் பெரிய பஸ்கள் வரை இயக்குகின்றன.
இதில் முக்கியமாக காலை ஏழு மணி முதல் ஒன்பது மணி வரை, மாலை நான்கு மணி முதல் ஆறு மணி வரை தேசிய நெடுஞ்சாலை முழுவதும் பள்ளி வாகனங்களாகவே காட்சியளிக்கின்றன. குழந்தைகளுக்கு ரோட்டின் மறு ஓரத்தில் வீடுகள் இருந்தாலும் டிரைவர்கள் தங்கள் இஷ்டம் போல் நிறுத்தி இறக்கி விட்டு சென்று விடுகின்றனர். ரோட்டை கடந்து செல்லும் பள்ளி குழந்தைகள் ,விளையாட்டுப் போக்கில் செல்லும் போது விபத்துகள் நடக்க ஏதுவாகின்றன. மேலும் பள்ளி வாகனங்கள் குறிப்பிட்ட இடங்களில் நிறுத்தாமல், திடீரென நிறுத்துவதால் பின்னால் வரும் வாகன ஓட்டிகள் நிலை தடுமாறுகின்றனர். இதுபோன்ற பிரச்னைகளை தவிர்க்க சம்பந்தப்பட்டவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.