/உள்ளூர் செய்திகள்/சென்னை/மும்பை டென்னிஸ் வீரரிடம்பணம், மொபைல் போன் திருட்டுமும்பை டென்னிஸ் வீரரிடம்பணம், மொபைல் போன் திருட்டு
மும்பை டென்னிஸ் வீரரிடம்பணம், மொபைல் போன் திருட்டு
மும்பை டென்னிஸ் வீரரிடம்பணம், மொபைல் போன் திருட்டு
மும்பை டென்னிஸ் வீரரிடம்பணம், மொபைல் போன் திருட்டு
சென்னை:மும்பை டென்னிஸ் வீரரின் மொபைல் போன் மற்றும் பணத்தை திருடிச் சென்ற கார் டிரைவரை போலீசார் தேடி வருகின்றனர்.நவி மும்பை பகுதியைச் சேர்ந்தவர் யோகேஷ் பெஞ்சமின் (38).
காரை, யோகேஷின் சகோதரரான பெஞ்சமின் சார்லசின் சிபாரிசின் பேரில் விக்கி என்பவர் ஓட்டி வந்தார். சென்னை வந்த இவர்கள் முதலில் யோகேஷின் உறவினர் அனிதா என்பவர் வீட்டில் தங்கினர்.சென்னையில் மழை பெய்ததால், டென்னிஸ் போட்டிகள் ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, காரில் சென்று தி.நகர் உள்ளிட்ட பகுதிகளில் பொருட்கள் வாங்கினர். தொடர்ந்து, பெரியமேட்டில் உள்ள ஒரு தனியார் விடுதியில் தங்கினர்.
பயணக் களைப்பில் யோகேஷ் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தார். உடன் அதே அறையில் தங்கிய டிரைவர் விக்கி, யோகேஷின் மொபைல் போன் மற்றும் பணத்தை திருட முயற்சி செய்துள்ளார்.எடுக்க முடியாததால், யோகேஷின் பேன்ட்டையே கழற்றிக் கொண்டு சென்றுவிட்டார். அதில், இரண்டு மொபைல் போன்கள் மற்றும் 5,000 ரூபாய் பணம் ஆகியவை இருந்தன. இதுகுறித்து யோகேஷ் பெரியமேடு போலீசில் புகார் அளித்தார். போலீசார் டிரைவர் விக்கியை தேடி வருகின்றனர்.


