/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ஐயப்பன் கோவில்: ஓணம் சிறப்பு வழிபாடுஐயப்பன் கோவில்: ஓணம் சிறப்பு வழிபாடு
ஐயப்பன் கோவில்: ஓணம் சிறப்பு வழிபாடு
ஐயப்பன் கோவில்: ஓணம் சிறப்பு வழிபாடு
ஐயப்பன் கோவில்: ஓணம் சிறப்பு வழிபாடு
ADDED : ஆக 24, 2010 02:07 AM
கோவை: ஓணம் பண்டிகையையொட்டி சித்தா புதூர் ஐயப்பன் கோவிலில் பக்தர்களுக்கு சிறப்பு அலங்காரத்தில் சுவாமி அருள்
பாலித்தார்.
ஐயப்பசுவாமிக்கு நிர்மால்ய பூஜை நேற்று காலை 5.15 மணிக்கு செய்யப் பட்டது.
கோவில் மேல்சாந்தி நீலகண்டன் நம்பூதிரி, ஐயப்ப சுவாமிக்கு, புண்ணிய தீர்த்தங்களால் சிறப்பு அபிஷேகம் செய்தார். நம்பூதிரி தலைமையில் கணபதிஹோமம் நடந்தது.
சுவாமிக்கு தீபாரதனை செய்யப் பட்டது. காலை 7.30 மணிக்கு சீவேலி பூஜை நடந்தது. காலை 8.30 மணிக்கு பந்திரடிபூஜையும், காலை 10.30 மணிக்கு உஷ பூஜையும் நடந்தது.
தொடர்ந்து சுவாமிக்கு பல வித ஆபரணங்களும், மலர்களாலும் அலங்கரிக்கப்பட்டு பக்தர்களுக்கு அருள்
பாலித்தார்.
பகல் 12.00 மணிக்கு கோவிலில் சிறப்பு அன்னதானம் செய்யப்பட்டது. சிறப்பு அன்னதானத்தில் ஓணம் ஸ்பெஷலாக இரண்டு வகைகளில் அவியல், வடை, பாயாசம் ஆகியவையும், வழக்கமான உணவு வகையும் பழவகைகளும் பரிமாறப்பட்டது.
தன்வந்திரி கோவிலில் சிறப்பு வழிபாடு: ஒலம்பஸிலுள்ள ஆர்யவைத்ய பார்மஸி வளாகத்திலுள்ள தன்வந்திரி கோவி
லில் சுவாமிக்கு அன்றாடம் வழிபாடு நடந்தது.
தொடர்ந்து சுவாமிக்கு புத்தாடை அணிவிக்கப்பட்டு, நகைகள், மலர்மாலைகள் அணிவிக்கப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.