Dinamalar-Logo
Dinamalar Logo


/வாராவாரம்/கனவு இல்லம்/ஆலோசனை/ செங்கல் தேர்விலும் கவனம் செலுத்துங்க!  'போரோதெர்ம்' பயன்படுத்த யோசனை

செங்கல் தேர்விலும் கவனம் செலுத்துங்க!  'போரோதெர்ம்' பயன்படுத்த யோசனை

செங்கல் தேர்விலும் கவனம் செலுத்துங்க!  'போரோதெர்ம்' பயன்படுத்த யோசனை

செங்கல் தேர்விலும் கவனம் செலுத்துங்க!  'போரோதெர்ம்' பயன்படுத்த யோசனை

ADDED : செப் 19, 2025 08:42 PM


Google News
Latest Tamil News
வீ டு கட்டும்போது நம்மில் பலரும், ஒவ்வொரு ரூமிலும் என்ன கலர் பெயின்ட் பூசலாம்; எவ்வாறு அழகுபடுத்தலாம் என்பதை மட்டுமே யோசிக்கிறோமே தவிர, வேறு முக்கியமானவற்றை பற்றி சிந்திப்பதில்லை; குறிப்பாக, செங்கற்கள்!

ஏனெனில், செங்கலின் தரமும், உறுதியும் மிக முக்கியம். உறுதியான செங்கல் என்றால், எடை அதிகமாக இருக்க வேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பு. சமீபகாலமாக புதிய வகை செங்கற்கள் கட்டுமான துறையில் அறிமுகம் செய்யப்படுகின்றன.

இவற்றில் செங்கலுக்குள் வெற்றிடத்துடன் தயாரிக்கப்படுவதை காணலாம். இவற்றை பயன்படுத்தினால் கட்டடம் உட்கார்ந்து விடுமோ என்று பதறக்கூடும். அதற்கெல்லாம் வாய்ப்பே இல்லை என்கிறார், 'கொசினா' உறுப்பினர் மாரிமுத்துராஜ்.

அவர் கூறியதாவது:

இவ்வகையான செங்கல் பலவித நன்மைகளை தருகிறது. இவை, வெப்பத்தை எளிதில் ஈர்ப்பதில்லை. கோடைகாலத்தில் ஏ.சி., பயன்பாட்டை குறைக்க முடியும். குளிர்காலத்தில் மின்சார பயன்பாடும் குறையும். இவ்வகை செங்கற்கள், 1,000 டிகிரி செல்சியஸ் வரை வெப்பப்படுத்தப்படுவதால், தீப்பற்றிக் கொள்வதில்லை.

தீயில் சிக்கினாலும், தீயில் வாட்டப்பட்டதுபோல் இருக்குமே, தவிர நச்சான வாயுக்கள் இவற்றின் வாயிலாக வெளிப்படுவதில்லை. செங்கலில் உள்ள துளைகள் ஒரு தனிப்பட்ட செயல்பாட்டை உருவாக்குவதன் வாயிலாக, கோடையில் ஓரளவு குளிர்ச்சியையும், குளிர்காலத்தில் வெதுவெதுப்பையும் கொடுக்கிறது.

இவை சுற்றுச்சூழலுக்கு உகந்தவையாகவும் விளங்குகின்றன. சாதாரண செங்கற்களை விட இது விலை குறைவானது. இயற்கையான பொருட்களான களிமண், கரிப்பொடி, உமி, கிரானைட் உள்ளிட்டவை கொண்டு உருவாவதால், ரசாயனம் கலந்தால் கூட ஒவ்வாமை ஏற்படுவதில்லை.

இந்த 'போரோதெர்ம்' செங்கல், வழக்கமான செங்கலின் எடையில், 60 சதவீதம் எடை கொண்டதாக மட்டுமே இருக்கிறது. இதனால், கையாள்வது எளிது. பூஞ்சை காளான் தாக்குதல் இந்த செங்கற்களை பயன்படுத்தும்போது இருப்பதில்லை.

இந்த வகை செங்கற்களை அஸ்திவாரத்துக்கு பயன்படுத்த முடியாது. அதேபோல், மிக அதிகமாக தண்ணீர் தேங்கியிருக்கும் இடங்களிலும் பயன்படுத்த முடியாது. காரணம், தண்ணீரின் எதிர்மறை அழுத்தத்தை, இவற்றால் தாங்கிக்கொள்ள முடிவதில்லை.

இவ்வாறு, அவர் கூறினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us