Dinamalar-Logo
Dinamalar Logo


/வாராவாரம்/கனவு இல்லம்/ஆலோசனை/ புலியகுளம் கோவில் அருகே 4.5 சென்ட் இடத்தை என்ன விலைக்கு வாங்கலாம்?

புலியகுளம் கோவில் அருகே 4.5 சென்ட் இடத்தை என்ன விலைக்கு வாங்கலாம்?

புலியகுளம் கோவில் அருகே 4.5 சென்ட் இடத்தை என்ன விலைக்கு வாங்கலாம்?

புலியகுளம் கோவில் அருகே 4.5 சென்ட் இடத்தை என்ன விலைக்கு வாங்கலாம்?

ADDED : செப் 19, 2025 08:43 PM


Google News
கோவை நகரம், புலிய குளம், பெரிய முந்தி விநாயகர் கோவில் அருகிலுள்ள, 4.5 சென்ட் காலியாக உள்ள மனை, லட்சுமி மில்ஸ் ரோடு, ரெட்பீல்ஸ் ரோடு சந்திக்கும் நகரின் மைய பகுதியில் அமைந்துள்ளது. இதனை என்ன விலை கொடுத்து வாங்கலாம்?

-சண்முகம், வெள்ளலுார்.

தாங்கள் கூறும் இடம் லட்சுமி மில்ஸ் மெயின் ரோட்டில் உள்ளதாக தெரிகிறது. இடத்தின் நீளம், அகலம் கூறவில்லை. இருப்பினும் பொதுவாக எடுத்துக் கொண்டால் தற்போதுள்ள எப்.எஸ்.ஐ., படி சுமார், 3,750 சதுரடி கட்டடம் கட்ட முடியும். கட்டடம் கட்டி வாடகைக்கு விடும் பட்சத்தில் சதுர அடிக்கு ரூ. 30 கிடைக்குமேயானால் இந்த இடத்தை, ரூ.1.50 கோடி வரை விலை பேசலாம்.

திருப்பூர் மாவட்டம், உடுமலை தாலுகா, கணியூர் கிராமத்தில் சுமார் நான்கு ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. இந்த இடமானது, உடுமலைப்பேட்டை மெயின் ரோட்டில் இருந்து சுமார் 7 கி.மீ. தொலைவில் உள்ளது. இதில், வி வசாயம் சம்பந்தப்பட்ட காய்கறி விளைவிக்கப் படுகின்றன. பி.ஏ.பி. தண்ணீர் வருடத்திற்கு நான்கு முறை கிடைக்கிறது. இந்த இடத்தை விற்க எண்ணுகிறேன்; என்ன விலை கிடைக்கும்.

-எம்.சக்தி, கணியூர்.

இந்த இடத்தில், பி.ஏ.பி., தண்ணீர் கிடைக்கும் என்று கூறுகிறீர்கள். ஆகவே, இந்த இடம் விவசாயத்துக்கு மட்டுமே பயன்படும் என்று தெரிகிறது.

தற்போது உள்ள சூழ்நிலையில் விவசாயம் செய்ய ஆட்கள் பெரிதாக கிடைப்பதில்லை. ஆகவே, வெளி ஆட்கள் வாயிலாக விவசாயம் செய்ய நேரிடுகிறது. கிடைக்கும் வருமானம் மிகவும் குறைவு. இக்காரணங் களால் ஏக்கர் ஒன்றுக்கு ரூ.22 லட்சம் கிடைக்க வாய்ப்பு உள்ளது.

கோவை மாவட்டம், குறிச்சி கிராமம், வெள்ளலுார் பகுதியில் கிராமம் நத்தம் ஏரியாவில், 23 அடி ரோட்டில் நான்கு சென்ட் இடம் மற்றும், 500 சதுரடிகள் கொண்ட மிகவும் பழமையான ஓட்டு வீடு ஒன்று உள்ளது. இது தற்போது விலைக்கு வருகிறது. என்ன விலை கொடுத்து வாங்கலாம்.

-ஆர். தனலட்சுமி, வெள்ளலுார்.

இந்த இடம் தற்போது வளர்ந்து வரும் கோவை மாவட்டத்தில் மையப் பகுதியாக உள்ளது. எல் அண்ட் டி பைபாஸில் இருந்து, 1.5 / 2.5 கி.மீ., தொலைவில்தான் உள்ளது. இக்காரணங் களால் சென்ட் ஒன்றுக்கு ரூ.12.5 லட்சம் பெறும்.

- -ஆர்.எம்.மயிலேறு

கன்சல்டிங் இன்ஜினியர்





      Our Apps Available On




      Dinamalar

      Follow us