Dinamalar-Logo
Dinamalar Logo


/வாராவாரம்/கனவு இல்லம்/ஆலோசனை/ பாதை வரிசை மாறிய பகுதியில் காலி மனை வாங்குவது சரியா?

பாதை வரிசை மாறிய பகுதியில் காலி மனை வாங்குவது சரியா?

பாதை வரிசை மாறிய பகுதியில் காலி மனை வாங்குவது சரியா?

பாதை வரிசை மாறிய பகுதியில் காலி மனை வாங்குவது சரியா?

ADDED : மே 21, 2025 07:54 AM


Google News
Latest Tamil News
பொதுவாக காலி மனை வாங்க வேண்டும் என்று நினைக்கும் மக்கள் ரியல் எஸ்டேட் நிறுவனங்களின் திட்டங்களையே நாடுகின்றனர். நீதிமன்றம் மற்றும் அரசின் பல்வேறு சட்ட நடவடிக்கைகள் காரணமாக, பெரும்பாலான ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் அங்கீகாரத்துடன் மனைப்பிரிவு திட்டங்களை செயல்படுத்துகின்றன.

இதன்படி ஒரு ரியல் எஸ்டேட் நிறுவனத்திடம் மனை வாங்க அணுகும் நிலையில், அங்கீகரிக்கப்பட்ட வரைபடத்தில் மனைகள் எப்படி பிரிக்கப்பட்டுள்ளன என்பதை கவனித்து பாருங்கள். முறையாக அங்கீகாரம் கொடுக்கப்படும் நிலையில் சாலைகளுக்கு உரிய இடம் ஒதுக்கப்பட்டு மனைகள் வரிசையாக அமைந்து இருக்கும்.

வரைபடத்தில் மனைகள் அனைத்தும் வரிசையாக உள்ளது, சாலைகள் சீரான நீளம், அகலத்தில் உள்ளது என்பதுடன் அமைதியாகிவிட முடியாது. சம்பந்தப்பட்ட திட்ட பகுதியை நேரில் சென்று பார்வையிடும் போதும், மனைகளின் வரிசை சீராக அமைந்துள்ளதா என்று பார்க்க வேண்டும்.

சில இடங்களில் ஒரு மனைப்பிரிவில், 24 அடி அகல சாலை இருக்கும் போது அதன் தொடர்ச்சியாக அடுத்த மனைப்பிரிவு வரும் போது அங்கு, 30 அடி அகல சாலை அமைக்கப்படுகிறது. இவ்வாறு ஒரு திட்டத்துக்கும், இன்னொரு திட்டத்துக்கும் முறையான ஒருங்கிணைப்பு இல்லாததால் ஒரே, சாலை வெவ்வேறு அகலத்தில் அமையும் நிலை ஏற்படுகிறது.

இதில் முதலில் வந்த திட்டத்தில், 24 அடி அகல சாலையும் சட்டப்படி அங்கீகரிக்கப்பட்ட நிலையில், அடுத்த மனைப்பிரிவில் அதன் தொடர் பகுதி, 30 அடி அகல சாலையாக அமைந்தால், அங்கு வசிப்போருக்கு பல்வேறு குழப்பங்கள் ஏற்படும். குறிப்பாக, இதில் எந்த திட்டத்தை செயல்படுத்தி நிறுவனம் தவறு செய்தது என்று மக்கள் யோசிப்பார்கள்.

மேலும், உள்ளாட்சி அமைப்புகள் அந்த சாலையை எதிர்காலத்தில் மேம்படுத்தும் போது, எது அதிகபட்ச அகலமோ அதன் அடிப்படையில் தான் பணிகளை திட்டமிடும். அப்போது, 24 அடி அகல சாலை உள்ள திட்டத்தில் மனை வாங்கியவர்கள் தங்களிடம் இருந்து ஒரு பகுதி நிலத்தை இழக்க வேண்டிய நிலை ஏற்படும்.

ரியல் எஸ்டேட் நிறுவனங்களின் திட்டங்களில் மனை வாங்கும் போது, அதன் வரிசை அமைப்பு, சாலை அகலம் தொடர்பான ஒட்டுமொத்த ஒருங்கிணைப்பு போன்ற விஷயங்களை பார்க்க வேண்டும். இதில் பழைய மனையை வாங்கும் போதும், வீடு வாங்கும் போதும், வரிசை அமைப்பு விஷயத்தில் மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்.

நீங்கள் மனை வாங்கிய பகுதியில், அக்கம் பக்கத்தில் யாராவது ஒருவர் சாலையில் சில அடிகளை ஆக்கிரமித்து முன்னோக்கி வந்திருந்தால், அதே அளவை நாமும் கடைப்பிடிக்க வேண்டிய அவசியம் இல்லை. இது போன்ற விஷயங்களில் மக்கள் தெளிவுடன் செயல்பட்டால், பல்வேறு பிரச்னைகளை தவிர்க்கலாம் என்கின்றனர் கட்டுமான துறை வல்லுனர்கள்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us