ரெபெல் 500: 500 சி.சி.,யில் ஹோண்டாவின் 'க்ரூஸர்'
ரெபெல் 500: 500 சி.சி.,யில் ஹோண்டாவின் 'க்ரூஸர்'
ரெபெல் 500: 500 சி.சி.,யில் ஹோண்டாவின் 'க்ரூஸர்'
ADDED : மே 22, 2025 08:19 AM

'ஹோண்டா மோட்டார்சைக்கிள்ஸ்' நிறுவனம், 'ரெபெல் 500' என்ற க்ரூஸர் பைக்கை முதல் முறையாக இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த பைக், இறக்குமதி முறையில் விற்பனையாகிறது.
உயரம் குறைந்தவர்கள் கூட எளிதாக ஓட்டும் வகையில், பைக்கின் சீட் உயரம் 690 எம்.எம்.,மாக உள்ளது. ராயல் என்பீல்டின் 650 சி.சி., பைக்குகளுக்கு போட்டியாக களமிரக்கப்பட்டுள்ள இந்த பைக், நீண்ட துார பயணத்திற்காக சொகுசாக பயணிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
அகலமான ஹேண்டில் பார், 11.2 லிட்டர் பெட்ரோல் டேங்க், டெலிஸ்கோப்பிக் மற்றும் டுவின் ஷாக் அப்சார்பர் சஸ்பென்ஷன்கள், அகலமான முன்புற மற்றும் பின்புற டயர்கள், 16 அங்குல அலாய் சக்கரங்கள், 296 மற்றும் 240 எம்.எம்., டிஸ்க் பிரேக்குகள், 6 - ஸ்பீட் கியர் பாக்ஸ், சிலிப்பர் கிளச்ட் ஆகியவை வழங்கப்படுகின்றன. இந்த பைக்கின் எடை, 191 கிலோவாக உள்ளது.
இதில், 471 சி.சி., லிக்விட் கூல்டு, இன்லைன் ட்வின் இன்ஜின் பயன்படுத்தப்படுகிறது. 100 கி.மீ., வேகத்தை 5.9 வினாடியில் எட்டிப் பிடிக்கிறது. டாப் ஸ்பீடு, 153 கி.மீ., ராகவும், மைலேஜ் 28 கி.மீ., தருவதாகவும் கூறப்படுகிறது. எல்.இ.டி., லைட்டுகள், எல்.சி.டி., டிஸ்ப்ளே, டூயல் சேனல் ஏ.பி.எஸ்., ஆகியவை இதர அம்சங்கள்.