ADDED : மே 22, 2025 08:16 AM

'மெர்சிடிஸ் பென்ஸ்' நிறுவனம், அதன் கார்களுக்கு, 3 சதவீத விலை உயர்வை அறிவித்துள்ளது. ஐரோப்பிய நாணயம் யூரோவுக்கு எதிராக இந்திய ரூபாயின் மதிப்பு, 10 சதவீதம் குறைந்ததன் காரணமாக, இந்தியாவில் இறக்குமதி முறையில் விற்பனை மற்றும் அசெம்பிள் செய்யப்படும் பென்ஸ் கார்களின் விலை அதிகரித்துள்ளது. அதை ஈடுகட்ட, இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது. உடனடி விலை உயர்வின் தாக்கத்தை குறைக்க இரண்டு கட்டங்களாக விலை உயர்த்தப்படுகிறது.
முதல் விலை உயர்வு ஜூனிலும், இரண்டாம் கட்ட விலை உயர்வு செப்டம்பரிலும் செய்யப்படுகின்றன. அதனால், 'சி - கிளாஸ்' காரின் விலை 90,000 ரூபாய் முதல் அதிகபட்சமாக 'மேபேக் எஸ் - கிளாஸ்' காரின் விலை, 12.20 லட்சம் ரூபாய் வரை விலை அதிகரிக்கிறது.