'ராப்டீ டி30' இ.வி., பைக் வினியோகம் சென்னை, பெங்களூரில் துவக்கம்
'ராப்டீ டி30' இ.வி., பைக் வினியோகம் சென்னை, பெங்களூரில் துவக்கம்
'ராப்டீ டி30' இ.வி., பைக் வினியோகம் சென்னை, பெங்களூரில் துவக்கம்
ADDED : மார் 26, 2025 10:27 AM

'ராப்டீ' நிறுவனம், அதன் மின்சார பைக்கான 'டி30' பைக்கை விற்பனை செய்ய, இந்திய வாகன ஆராய்ச்சி சங்கத்திடம் தகுதிச் சான்றிதழ் பெற்றுள்ளது.
இந்த பைக், 'ஹை வோல்டேஜ்' கட்டுமான தளத்தில் கட்டமைக்கப்பட்ட நாட்டின் முதல் பைக்காகும். இது மின்சார கார்கள் மற்றும் வர்த்தக வாகனங்களில் பயன்படுத்தப்படும் தொழில்நுட்பம் ஆகும். கடந்த ஆறு ஆண்டுகளாக ஆராய்ச்சி செய்து, மின்சார பைக்குகளில் பயன்படுத்தும் வகையில், இந்த தொழில்நுட்பம் உருமாற்றப்பட்டுள்ளது. இந்த ஹை வோல்டேஜ் பைக் கட்டுமான தளத்தில், 156 காப்புரிமைகளை பெற்றுள்ளது இந்நிறுவனம்.
நாடு முழுதும் உள்ள 22,000 கார் சார்ஜிங் நிலையங்களில், இந்த பைக்கை சார்ஜ் செய்ய முடியும். கார்களில் வரும் 'சிசிஎஸ்2' என்ற சார்ஜிங் அமைப்பு கொண்ட ஒரே பைக் இது. இந்த பைக்கின் செயல்திறன், 300 சி.சி., பைக்கிற்கு நிகராக இருக்கும் என இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதுவரை இந்த பைக்கிற்கு, 8,000 முன்பதிவுகள் வந்துள்ளன. இதன் வாயிலாக, முதல் ஆண்டில், 218 கோடி ரூபாய்க்கு விற்பனை இலக்கு வைக்கப்பட்டுள்ளது. சென்னை மற்றும் பெங்களூரில், அடுத்த நிதியாண்டு முதல் வினியோகம் துவங்குகிறது. படிப்படியாக இது, மற்ற மாநிலங்களுக்கு விரிவாக்கம் செய்யப்படும். இந்த பைக்கின் விலை, 2.39 லட்சம் ரூபாயாக உள்ளது.