ADDED : ஜூலை 10, 2024 08:33 AM

இந்தியாவில் அதிகம் உற்பத்தி செய்யப்படும் பொருளாக அரிசி உள்ள நிலையில், அதனை விளைவிக்க நாற்று நடுவது மிகவும் அவசியம். இதற்காக 'பேடி வாக்கர் 6 ரோ' என்ற நாற்று நடும் இயந்திரத்தை உருவாக்கியுள்ளது 'மஹிந்திரா பார்ம் எக்யுப்மென்ட்ஸ்' நிறுவனம்.
சீரற்ற நிலப்பரப்பாக இருந்தாலும், 6 வரிசைகளில் நாற்று நடும் திறனுடையது இந்த இயந்திரம். ஒரு நாற்றுக்கும் மற்றொரு நாற்றுக்கும் இடையே உள்ள துாரத்தை 6 வகையாக மாற்றம் செய்யும் வசதி வழங்கப்பட்டுள்ளது. நிலத்தில் நாற்று நடுவதற்கான ஆழம், ஒரு இடத்தில் எத்தனை நாற்றுகளை நடுவது உள்ளிட்ட மாற்றங்களையும் கூடுதலாக இதில் செய்து கொள்ளலாம்.
இதில், யமஹாவின் சிங்கிள் சிலிண்டர், எம்.இசட்., - 175 என்ற நம்பகமான இன்ஜின் பயன்படுத்தப்படுகிறது. இதின் பெட்ரோல் டேங்க்கின் சேமிப்பு திறன் 4 லிட்டராக உள்ளது. 4 லிட்டர் பெட்ரோலில், 5 மணி நேரம் வரை இந்த இயந்திரத்தை பயன்படுத்த முடியும்.
விலை - ரூ.2.50 லட்சம்