Dinamalar-Logo
Dinamalar Logo


/வாராவாரம்/சித்ரா... மித்ரா ( கோவை)/கம்யூ.,க்கு கல்தா கொடுக்க நடக்குது பேச்சு போலீஸ் துணையோட நடக்குது 'அடச்சீ'

கம்யூ.,க்கு கல்தா கொடுக்க நடக்குது பேச்சு போலீஸ் துணையோட நடக்குது 'அடச்சீ'

கம்யூ.,க்கு கல்தா கொடுக்க நடக்குது பேச்சு போலீஸ் துணையோட நடக்குது 'அடச்சீ'

கம்யூ.,க்கு கல்தா கொடுக்க நடக்குது பேச்சு போலீஸ் துணையோட நடக்குது 'அடச்சீ'

UPDATED : பிப் 06, 2024 02:24 AMADDED : பிப் 06, 2024 01:02 AM


Google News
Latest Tamil News

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

'பர்ச்சேஸ்' செய்வதற்கு டவுன்ஹால் சென்றிருந்த சித்ராவும், மித்ராவும் விக்டோரியா ஹால் பகுதியில், ஸ்கூட்டரை ஓரங்கட்டி நிறுத்தினர். மாமன்ற கூட்டத்துக்கு கவுன்சிலர்கள் பலரும், விலை உயர்ந்த கார்களில் வந்திறங்கினர்.

அவர்களை பார்த்த மித்ரா, ''என்னக்கா, கவுன்சிலர்கள் பலருக்கும் வசதி வாய்ப்பு வந்துருச்சு போலிருக்கே. கழுத்துல தங்கச்செயின் புரளுது; 'கெத்து' காட்ட ஆரம்பிச்சிட்டாங்களே,'' என, பேச்சை ஆரம்பித்தாள்.

கவுன்சிலரின் கையாள்


''மித்து, ஆளுங்கட்சி கவுன்சிலர்கள் சிலருக்கு, பலவிதத்திலும் வருமானம் கொட்டுது. ஆளுங்கட்சி கவுன்சிலரின் கையாள் ஒருத்தரு, நார்த் ஜோன்ல, கட்டட அனுமதி தொடர்பான கோப்புகளை மிக 'அசால்ட்'டா கையாள்றாராம். எந்த ஆவணமும் இல்லாம, கட்டடங்களுக்கு அனுமதி வாங்கித்தர்றதுல கில்லாடியா இருக்காரு,''

''ஆளும்கட்சியை சேர்ந்த, 10 கவுன்சிலர்களின் பெயரை பயன்படுத்தி, 'அது அந்த கவுன்சிலர் சொன்னது; இது, இந்த கவுன்சிலர் சொன்னது'ன்னு, அதிகாரியை மிரட்டி கையெழுத்து வாங்குறாராம். வடக்கில் இருந்து, மெயின் ஆபீசுக்கு வரும் பல கோப்புகள், ஏகப்பட்ட வில்லங்கத்தோட இருக்குதாம். அவற்றை கமிஷனருக்கு பரிந்துரைக்கிறதுக்கு, டவுன் பிளானிங் ஆபீசர்ஸ் பயப்படுறாங்களாம்,''

சம்பாதிக்கும் அந்த கையாள், கவுன்சிலருக்கு மாதந்தோறும் பெரிய தொகையை மாமூலா தர்றாராம். அவர், 'மாவட்டத்தை' கவனித்து விடுகிறாராம். சில மாதங்களுக்கு முன், அனுமதி தந்த கோப்புகளை தோண்டிப் பார்த்தால், ஏகப்பட்ட குளறுபடியும், முறைகேடும் நடந்திருப்பது வெளிச்சத்துக்கு வரும்னு சொல்றாங்க,''

கம்யூ., 'கப்சிப்'


அப்போது, 24 மணி நேர குடிநீர் திட்ட அதிகாரிகள், கடந்து சென்றனர். அவர்களை பார்த்த மித்ரா, ''சிறுவாணி டேம்ல இருந்து ஒப்பந்தப்படி, 10 கோடி லிட்டர் தண்ணீர் எடுக்கலாமே; 26 அடிக்கு நீர் மட்டம் இருந்தும், 3 கோடி லிட்டரு தான் தர்றாங்களாமே...'' என, சப்ஜெக்ட் மாறினாள்.

''ஆமாப்பா... உண்மைதான்! ஆழியாறு டேமில இருந்து கேரளாவுக்கு தண்ணீர் குறைச்சு தர்றதா சொல்லி, சிறுவாணியில இருந்து நமக்குத் தர வேண்டிய அளவை குறைச்சிட்டாங்களாம். நம்மூர்ல எம்.பி.,யா இருக்கற நடராஜன், மா. கம்யூ., கட்சியை சேர்ந்தவர்.

கேரளாவிலும் கம்யூ., ஆட்சி தான் நடக்குது. ஒப்பந்தப்படி தண்ணீர் கொடுக்குறதுக்கு இன்னும் வலியுறுத்தாம இருக்கறதுனால, தி.மு.க.,வை சேர்ந்தவங்க புலம்பிட்டு இருக்காங்க,''

கம்யூ.,வுக்கு கல்தா?


''அதெல்லாம் இருக்கட்டும். கம்யூ., கட்சிகளுக்கு கோவையை ஒதுக்க மாட்டாங்கன்னு பேசிக்கிறாங்களே ... உண்மையா...''

''அரசியல் களம் கொஞ்சம், கொஞ்சமா சூடாகிட்டு வருது. இந்திய கம்யூ., நாலு முறையும், மா.கம்யூ., மூனு முறையும் ஜெயிச்ச தொகுதிங்கிறதுனால, மறுபடியும் ஒதுக்கச் சொல்லி மன்றாடுறாங்க. ஆனா, பா.ஜ.,வை எதிர்க்கிறதுக்கு வலுவான வேட்பாளரை நிறுத்தணும்னு தி.மு.க., நிர்வாகிகள், கட்சி தலைமைகிட்டசொல்லி இருக்காங்களாம்,''

''நம்மூரை சேர்ந்த அ.தி.மு.க., நிர்வாகிகளுக்கும், பா.ஜ., மேல்மட்ட தலைவர்களுக்கும் இடையே சுமூகமான உறவு இருக்கறதுனால, அ.தி.மு.க., சார்புல 'டம்மி'யான வேட்பாளரை நிறுத்தி, பா.ஜ.,வுக்கு சப்போர்ட் பண்ணுவாங்கன்னு நினைக்கிறாங்க. அதனால, பா.ஜ.,வை எதிர்க்கிறதுக்கு, கமல்தான் சரியான தேர்வா இருக்கும்னு சொல்லியிருக்காங்க,''

''மா.கம்யூ., தரப்பிலும், நடிகர் கமல் கட்சியான மக்கள் நீதி மய்யம் தரப்பிலும் தனித்தனியா கூட்டம் நடத்தி, தொகுதி நிலவரத்தை அலசி இருக்காங்க. ஸ்பெயின் போயிருக்கிற ஸ்டாலினும், அமெரிக்கா போயிருக்கிற கமலும் திரும்பி வந்து, நேருக்கு நேர் சந்திச்ச பிறகே, முடிவு தெரியும்னு உடன்பிறப்புகள் சொல்றாங்க,'' என்றாள்.

வர்றாரு முதல்வர்


''முதல்வர் ஸ்டாலினும், அமைச்சர் உதயநிதியும் நம்மூருக்கு வரப்போறதா கேள்விப்பட்டேனே...''

''அதுவா... திருமண விழாவுல கலந்துக்கிறதுக்காக... வர்ற, 10ம் தேதி சனிக்கிழமை முதல்வர் ஸ்டாலின் கோவை வர்றாரு. மறுநாள், 11ம் தேதி ஞாயித்துக்கிழமை உதயநிதி வர்றாரு. அப்போ, பில்லுார் மூன்றாவது குடிநீர் திட்டத்தை துவக்கி வைப்பாராம். கட்சி நிர்வாகிகளை சந்திச்சு, தொகுதி நிலவரம் சம்பந்தமா பேசுவாராம்,''

''அன்னைக்கு, எம்.பி., கனிமொழி தலைமையிலான குழுவும் நம்மூருக்கு வருது. தேர்தல் அறிக்கை தயாரிக்கிறது சம்பந்தமா, கட்சிகாரங்ககூட விவாதிக்கிறதுக்கு பிளான் போட்டுருக்காங்க,''

- இருவரும் பேசிக்கொண்டே, ஒப்பணக்கார வீதியில் நடந்து சென்றனர். செப்பல் ஸ்டோருக்குள் நுழைந்த மித்ரா, புது மாடலில் ஒரு ஜோடி வாங்கிக் கொண்டு, வெளியே வந்தாள்.

போலீசாரின் முணுமுணுப்பு


சித்ரா, ''குனியமுத்துார் போலீஸ்காரங்க மேல ஏகப்பட்ட புகார் வந்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கறதில்லையாமே...'' என்றாள் மித்ரா.

''ஆமா, மித்து! நானும் கேள்விப்பட்டேன். மூனு நம்பர் லாட்டரி, கஞ்சா, அரிசிக் கடத்தலில் சம்பாதிக்கிற அந்த மூனு போலீஸ்காரங்களை பற்றி, உயரதிகாரிகளுக்கு புகார் போயிருக்கு. எந்த நடவடிக்கையும் எடுக்கலை. ஆனா, ஸ்டேஷனுக்கு ஒரு விழாவுக்குப் போன ஆபீசர், அவுங்களுக்கு சான்று கொடுத்து பாராட்டிட்டு போனாராம்,''

''அந்த போலீசார் கூட தொடர்புல இருக்கற, மூனு நம்பர் லாட்டரி நடத்துற இளைஞர்கள் சில பேரு, அதில் புழங்கற பணத்தை வச்சு ஸ்கூல், காலேஜ் மாணவியர் பல பேருக்கு, மானாவாரியா பணம் செலவழிச்சு, அவங்களை விதம் விதமா படமெடுத்து, தவறா பயன்படுத்துறாங்களாம்,''

''நேர்மையா விசாரிச்சா, பொள்ளாச்சி பாலியல் சம்பவங்களுக்கு சவால் விடுற அளவுக்கு, பல விஷயங்கள் நடந்துருக்கறது வெளிச்சத்துக்கு வருமாம்; தேர்தல் சமயத்துல லேடீஸ் விவகாரம் வெளியே வந்தால், கவர்மென்ட்டுக்கு கெட்ட பேரு ஏற்படும்னு, போலீஸ் அதிகாரிங்க இந்த விவகாரத்தை மூடி மறைக்க முயற்சிக்கிறதா, போலீஸ் வட்டாரத்துல முணுமுணுப்பு கேக்குது,''

'ஸ்கிரீன் ஷாட்' வைரல்


''போலீஸ் உயரதிகாரி ஒருத்தரின், 'வாட்ஸ் ஆப் ஸ்கிரீன் ஷாட்' சமூக வலைதளத்துல வைரலாச்சே... என்ன விவகாரம்... விசாரிச்சீங்களா...''

''அந்த அதிகாரி, ஒரு லேடி கூட வாட்ஸ் அப் வீடியோ கால் பேசியிருக்காரு. அந்த சமயத்துல எடுத்த ஸ்கிரீன் ஷாட்டை தவறுதலா, போலீஸ்காரங்க உறுப்பினரா இருக்கற குரூப்புல போட்டுட்டாராம்... அதை சக போலீஸ்காரங்க, சமூக வலைதளத்துல பரப்பி வைரலாக்கி இருக்காங்க,''

''இதுசம்பந்தமா உளவுத்துறை போலீசார் 'என்கொயரி' செஞ்சுருக்காங்க. சம்பந்தப்பட்ட அதிகாரியை மரியாதை நிமித்தமா யாராவது சந்திச்சு, பொன்னாடை போர்த்துனா... பொன்னாடை எவ்வளவு ரூபாய்ன்னு கேட்பாராம்; அஞ்சாயிரம் ரூபாய் மதிப்புள்ள பொன்னாடை போர்த்துனா தான் மரியாதையா ஏத்துக்குவாராம்... '' ''இல்லேன்னா... மரியாதை செஞ்சவுங்க முன்னாடியே கீழே துாக்கிப் போட்டு, மனசை நோகடிச்சிடுவாராம். அந்த மாதிரி பாதிக்கப்பட்ட போலீசார் பார்வைக்கு, ஸ்கிரீன் ஷாட் கிடைச்சதும்... 'கண்ணா... லட்டு தின்னா ஆசையா'ன்னு சொல்ற மாதிரி... ஏகப்பட்ட குரூப்புகள்ல பரப்பி விட்டுட்டாங்க... ஒரு போலீஸ் அதிகாரிக்கே இந்த நிலைமையான்னு... சக அதிகாரிகள் புலம்பிட்டு இருக்காங்க... ''

டபுள் டமாக்கா...


''மின் வாரியத்துல ஒரு ஆபீசர், ரெண்டு பதவியை கவனிக்கிறாராமே...''

''ஆமாப்பா... உண்மைதான்! மின் வாரியம் மெட்ரோ சர்க்கிள்ல முக்கியமான பொறுப்புல இருந்த இன்ஜினியர் ஒருத்தரு, போன மாசம் ரிட்டையர் ஆனார். புதுசா இன்னும் அதிகாரி நியமிக்காம, கீழ்நிலை இன்ஜினியருக்கு முழுப் பொறுப்பு கொடுத்திருக்காங்க,''

''இந்த விவகாரத்துல, வேற சர்க்கிள்கள்ல வேலை பார்க்குற சம அந்தஸ்துல இருக்கிற அதிகாரிகளுக்கு, கூடுதல் பொறுப்பு வழங்கியிருக்கணும்.

அப்படி செய்யாம, கீழ்நிலை இன்ஜினியருக்கு கூடுதல் பொறுப்பு வழங்கியிருக்கிறது தவறான முன்னுதாரணம்னு கொந்தளிக்கிறாங்க. ஏன்னா, ஒரு வேலையை அவரே பரிந்துரை செஞ்சிட்டு, அவரே ஒப்புதல் கொடுத்தா, முறைகேடு நடக்குறதுக்கு வாய்ப்பிருக்குன்னு சொல்றாங்க...'' என்றாள்.

கதறும் ஆபீசர்


''அதெல்லாம் இருக்கட்டும்! சூலுாரை சேர்ந்த ஆபீசர் ஒருத்தரு, 'இதுக்கு மேல என்னால தாங்க முடியாது; என்னை வேற இடத்துக்கு மாத்திடுங்கன்னு கதறுறாராமே...''

''அதுவா, சூலுார் ஒன்றியத்துல இருக்குற ஒரு பேரூராட்சியை சேர்ந்த தலைவரை பார்த்து, செயல் அலுவலருக்கு பயமாம். தலைவர் செய்ற முறைகேடுகளுக்கு உடந்தையா போக வேண்டிய நெருக்கடி ஏற்படுறதுனால, உயரதிகாரியை சந்திச்சு, வேறு ஊருக்கு மாத்திடுங்கன்னு சொல்லிட்டு வந்திருக்காங்க,''

''ஆனா, இதே ஒன்றியத்துல இன்னொரு டவுன் பஞ்சாயத்துல நிலைமை தலைகீழா இருக்குது. தலைவரும், உறுப்பினர்களும் சேர்ந்து, முன்மாதிரி நகரமா மாத்துறதுக்கு முயற்சி செஞ்சுட்டு இருக்காங்க.

அங்க வேலைபார்க்குற செயல் அலுவலரோ, ஆபீஸ் தேடி வர்ற ஜனங்ககிட்ட வசூல் வேட்டையில ஈடுபடுறாராம். கரன்சி கொடுத்தா தான், வேலை செஞ்சு கொடுக்குறாராம்,'' என, பேசிக்கொண்டே ஸ்கூட்டரை ஸ்டார்ட் செய்தாள் சித்ரா.

கட்சி ஆபீசாக மாறியது


தி.மு.க., கொடி பறந்த கார் ஒன்று, ஸ்கூட்டரை கடந்து சென்றது. அதை கவனித்த மித்ரா, ''ஆளுங்கட்சிக்காரங்க கவர்மென்ட் ஆபீசுல இருக்குற, அறையில உட்கார்ந்துக்கிட்டு கட்டப்பஞ்சாயத்து செய்ய ஆரம்பிச்சிட்டாங்களாமே...'' என கேட்டாள்.

''ஆமா, மித்து! உண்மைதான்! கொஞ்ச நாளைக்கு முன்னாடி, காரமடை முனிசிபாலிட்டியில் மன்ற கூட்டம் நடந்துச்சு. தி.மு.க., கவுன்சிலர்களுக்குள்ள உட்கட்சி பூசல் இருக்கறதுனால, தீர்மானத்தை நிறைவேற்ற விடாம நிறுத்தி வச்சிட்டாங்க...''

''கட்சி நிர்வாகியை, பஞ்சாயத்துக்கு அழைச்சிருக்காங்க. நகராட்சி அலுவலகத்துல இருக்குற பொறியாளர் அறையில பஞ்சாயத்து நடந்திருக்கு. மன்ற கூட்டத்துல இருந்து, தி.மு.க., கவுன்சிலர்கள் பாதியில் எந்திரிச்சு போய், பஞ்சாயத்து பேசியிருக்காங்க,''

''இதை கேள்விப்பட்டு, தி.மு.க., தலைமை செயற்குழு உறுப்பினரும், முனிசிபாலிட்டி ஆபீசுக்கு வந்திருக்காரு. அவரோ... நேரடியா கவுன்சில் கூட்டத்துல போயி உட்கார்ந்து, பஞ்சாயத்து பேசியிருக்காரு.

பா.ஜ., கவுன்சிலர்கள் எதிர்ப்பு தெரிவிச்சதும்... வெளியே போயிருக்காரு. கவர்மென்ட் ஆபீசுல உக்கார்ந்து ஆளுங்கட்சிக்காரங்க 'அட்ரா சிட்டி' செய்றதை பொறுக்க முடியாம, ஆபீசர்ஸ் பலரும் புலம்பிட்டு இருக்காங்க,'' என்றாள்.

வீட்டை நோக்கி, ஸ்கூட்டரை முறுக்கினாள் சித்ரா.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us