ADDED : ஜூன் 08, 2024 09:07 AM

ஆனைமலை கென்னல் கிளப் சார்புல, சேம்பியன் ஷிப் டாக் ஷோ, நாளைக்கு, கோவை, எஸ்.என்.எஸ்., தொழில்நுட்ப கல்லுாரியில நடக்குதுங்கோ. இந்த வீக் எண்டுல, உங்க செல்லங்களை சர்பிரைஸ் பண்றதுக்கான நேரம் வந்தாச்சு. ஆனைமலை கென்னல் கிளப், 21 வருஷமா தொடர்ந்து, டாக் ஷோ நடத்துறாங்க.
இந்த வருஷத்துக்கான ஷோ, நம்ம கோயமுத்துார், சத்தி ரோட்டுல இருக்கற, எஸ்.என்.எஸ்., தொழில்நுட்ப கல்லுாரியில, நாளை (ஜூன் 9ம் தேதி) காலை 10:00- இரவு 7:00 மணி வரைக்கும் நடக்குது. இங்க, உங்க பப்பியோட மொத்த திறமையும் வெளிப்படுத்தி, பரிசை தட்டி துாக்கலாம்.
மொத்தம் ஆறு பிரிவுகள்ல போட்டி நடத்துனாலும், எல்லா ப்ரீட்லயும் பெஸ்ட் 'மேல்', 'பீமேல்', 'பப்பி'க்குன்னு பிரத்யேகமா பரிசு இருக்காம். ஒட்டுமொத்தமா பெஸ்ட் ஆப் ஷோ டைட்டில் வின் பண்ற டாக் யாருன்னு தெரிஞ்சிக்கணுமா, குடும்பத்தோட ஷோ பாக்க வந்துடுங்க. இங்க ஸ்டால்ஸ் இருக்கறதால, உங்க பப்பிக்கு தேவையானதை பர்சேஸ் பண்ணலாம். கூடுதல் தகவலுக்கு, 99424 74747, 94424 74747 எண்களுக்கு டயல் செய்யலாமுங்கோ.