டாக்டர்'ஸ் கார்னர்: பப்பிக்கு இருமலா
டாக்டர்'ஸ் கார்னர்: பப்பிக்கு இருமலா
டாக்டர்'ஸ் கார்னர்: பப்பிக்கு இருமலா
ADDED : ஜூன் 08, 2024 09:06 AM

என் பப்பி தொடர்ந்து சத்தமாக இருமிக்கொண்டிருக்கிறது; சிகிச்சை முறைகள் என்ன?- ஜே. சுதா, கோவை.
வெயிலுக்கு பின், திடீரென பருவநிலை மாறியிருப்பதால் பப்பிகளுக்கு உடல்ரீதியாக சில மாற்றங்கள் ஏற்படலாம். குறிப்பாக, சளி, இருமல் தொந்தரவு இருக்கலாம். பிரத்யேக மருந்துகள் கொடுத்தால் உடனே சரியாகிவிடும். ஆனால் சத்தமாக இருமுதல், சளி தொடர்ந்து வெளியேறுவது, உடல் வெப்பநிலை அதிகரித்தல், 'சலைவா' வெளியேறிக்கொண்டே இருந்தால், 'கென்னல் காப்' (கென்னல் இருமல்) அறிகுறியாக இருக்கலாம்.
இது, காற்றின் மூலம் பரவும் சில வைரஸ், பாக்டீரியா தொற்றால் ஏற்படுகிறது. மூன்று நாட்களுக்கு மேல் சத்தமாக இருமிக்கொண்டிருந்தாலோ, சோர்வுடன் காணப்பட்டாலோ, சரியாக சாப்பிடாமல் வாந்தி எடுத்தாலோ, பப்பியை உடனே மருத்துவரிடம் அழைத்து செல்வது அவசியம்.
கென்னல் இருமலுக்கு பிரத்யேக தடுப்பூசிகள், மருந்துகள் உள்ளதால், உடனே குணப்படுத்திவிட முடியும். வீட்டில், வேறு செல்லப்பிராணிகள் இருந்தால், பாதிக்கப்பட்ட பப்பியை தனியாக பராமரிப்பது அவசியம். இத்தொற்று மனிதர்களுக்கு பரவாது. இருப்பினும், பப்பியை தொட்டபிறகு, கைகளை சோப்பால் கழுவுவது நல்லது.
- ஆர். உதயக்குமார், கால்நடை மருத்துவர், கோவை.