Dinamalar-Logo
Dinamalar Logo


/வாராவாரம்/செல்லமே/ஸ்டைலா... மாஸா! 'டாக் ஷோ'வில் கலக்கிய பப்பிஸ்

ஸ்டைலா... மாஸா! 'டாக் ஷோ'வில் கலக்கிய பப்பிஸ்

ஸ்டைலா... மாஸா! 'டாக் ஷோ'வில் கலக்கிய பப்பிஸ்

ஸ்டைலா... மாஸா! 'டாக் ஷோ'வில் கலக்கிய பப்பிஸ்

ADDED : பிப் 24, 2024 10:44 AM


Google News
Latest Tamil News
ஒரு பெட் வளர்த்தா கிடைக்கற அனுபவம் வேற லெவல். வீட்டுல ஒருத்தரா மாறிடுற பெட்ஸ்சோட ஊர் சுற்றுவது, ஷாப்பிங் செய்வது தாண்டி, குரூமிங் செய்வது, ஷோக்களுக்கு அழைச்சிட்டு போறது தான் டிரெண்டாகுது. அங்க, நிறைய பெட் பேரன்ட்ஸ் மீட் பண்றதோட, மத்த பிரீட் பத்தி, தன்னோட செல்லத்துக்கு இருக்கற டேலண்டையும் எக்ஸ்போஸ் பண்றாங்க.

'கோவை மான்செஸ்டர் கென்னல் கிளப்' சமீபத்துல கோவை அவிநாசிரோடு,

இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லுாரியில, டாக் ஷோ நடத்துனாங்க. 250க்கும் மேற்பட்ட

டாக்ஸ் இந்த ஷோக்கு வந்துச்சு. இதுல, க்யூட்டா போஸ் கொடுத்த பப்பிஸ் இதோ:

சேம்பியன் ஷாடி!

'' கேரளா, திருவனந்தபுரத்தில இருந்து, ஹை போனி ஹேர் ஸ்டைல்ல, தன்னோட பிரீடர் அன்வர் சலீம்மோட வந்து போஸ் கொடுத்த சிட்சூ பெயர், 'கில்லர் ஷாடி'. குட்டியா, க்யூட்டான லுக்லயே, பார்வையாளர்களை மயங்க வக்கிற ஷாடி, 7 சேலஞ்ச் சேம்பியன் அவார்ட்டுக்கு சொந்தக்காரி. சமீபத்துல கொடைக்கானல்ல நடந்த டாக் ஷோல இந்தியன் சாம்பியன் அவார்டு வாங்கியிருக்கா. 3 பெஸ்ட் ஆப் பிரீட் அவார்டு, 5 ரிசர்வ் பெஸ்ட் ஆப் பிரீட்னு, அவார்ட்ஸ்சோட பட்டியல் நீண்டுக்கிட்டே போகுது.

ஓனர் அசோக் கூறுகையில்,'' நான் 32 சிட்சூவ, வீட்டுல வளர்க்குறேன். இதுக்காகவே 4 ஏ.சி., ரூம் செட் பண்ணியிருக்கேன். ஷாடி கொஞ்சம் வித்தியாசமானவ. பழக்கமில்லாத யாரையும் நம்ப மாட்டா. ஷோக்களுக்கு, நான், பிரீடர் அன்வர்சலீம் பார்த்தா மட்டும் தான் க்யூட் போஸ்களை அள்ளி கொட்டுவா,'' என்றார்.

சேட்டைக்காரி சேசு!

கருப்பு, பிரவுன், வைட் கலர்ல, பாக்கவே ஜைஜான்டிக்கா இருந்த, செயின்ட் பெர்னால்டு, டெரர்ரா 'ஊஊஊன்னு...' சத்தம் போட்டு, ஒட்டுமொத்த கூட்டத்தயும் திரும்பி பார்க்க வச்சிடுச்சு. கேமரா எடுத்ததும், குழந்தை மாதிரி க்யூட் போஸ்களை அள்ளித்தெளித்த இந்த பிரீடோட ஓனர், கோவை, போத்துனுாரை சேர்ந்த ஃப்ரெடி பீட்டர்கிட்ட பேசுனோம்.

''இந்த செயின்ட் பெர்னால்டு பிரீட், ஐதராபாத்துல வாங்குனேன். இதோட பேரு சேசு; ரெண்டரை வயசாகுது. ஆள்தான் பாக்குறதுக்கு பிரமாண்டமா இருக்கும். பழகி பாருங்க, குழந்தைய விட மோசம். என் பத்து வயசு பையன்கூட சேர்ந்துகிட்டு, இது பண்ற சேட்டைக்கு அளவே இல்லை. சேசு எப்பவும் விளையாடிக்கிட்டே இருப்பா. ஆள் இல்லைன்னா ஒரே அழுகதான். திரும்பி வீட்டுக்கு வந்ததும், ரெண்டு காலையும் மேல போட்டு கீழ தள்ளி, திட்டி தீத்துரும்; அவ்வளவு பாசம். இதுனாலயே, முடிஞ்ச அளவுக்கு எங்க போனாலும் கூட்டிட்டு போய்டுறேன்,'' என்றார்.

கோவக்காரன் ஹல்க்!

சூட்டிப்பா சுத்திகிட்டு இருந்த மினியேச்சர் பின்ச்சர், தன்னோட ஆக்டிவிட்டியால, எல்லாரோட கவனத்தையும் ஈர்த்துடுச்சு. இதோட ஓனர், திருப்பூரை சேர்ந்த அப்புவிடம் பேசியபோது,'' பக், ஹஸ்கி, அமெரிக்கன் காக்கர், கோல்டன் ரெட்ரீவர்னு, நெறைய டாக்ஸ் வீட்டுல வளர்க்குறேன். இதுல 'மின்பின்'னு ஷார்ட்டா சொல்ற மினியேச்சர் பின்ச்சர் தான், என்னோட பேவரட். இது மேக்ஸிமம், 7 இன்ச் வரைக்கும் வளரும்.

ஹைப்பர் ஆக்டிவ்வா இருக்கறதால, 'ஹல்க்'னு பேரு வச்சிருக்கேன். ரொம்ப சேட்டைக்காரன். பெரிய டாக்ஸ்கிட்ட தான் வம்புக்கு போவான். துறுதுறுன்னு இருக்கறதால, ஷோ, வெளியிடங்களில், மத்தவங்க கவனத்தை ஈஸியா தன் பக்கம் திருப்பிடும். டாபர் மேன் மாதிரி, இதோட உடம்புலயும் பேட்சஸ் இருக்கும். ஆனா இது டாபர் மேன் வெரைட்டி கிடையாது'', என்றார் அப்பு.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us