Dinamalar-Logo
Dinamalar Logo


/வாராவாரம்/செல்லமே/என் தனிமைக்கு துணை ரோஸியும், சிண்டுவும்!

என் தனிமைக்கு துணை ரோஸியும், சிண்டுவும்!

என் தனிமைக்கு துணை ரோஸியும், சிண்டுவும்!

என் தனிமைக்கு துணை ரோஸியும், சிண்டுவும்!

ADDED : ஜூன் 29, 2024 08:14 AM


Google News
Latest Tamil News
''எனக்கு ஒரே பையன். பொண்ணு இல்லாத குறையை, ரோஸி தான் தீர்த்து வைக்கிறா. அவள குளிப்பாட்டி, பொட்டு வச்சி அழகுப்பார்ப்பேன்,'' என்கிறார், கோவை, கார்ந்திபார்கை சேர்ந்த மஞ்சு.

நிறைய வெரைட்டி பெட்ஸ் வளர்க்கும் இவர், நம்மிடம் பகிர்ந்தவை: எனக்கு சின்ன வயசுல இருந்து, பெட்ஸ்னா ரொம்ப புடிக்கும். ரெண்டு முறை, பேர்ட்ஸ் வாங்கியும், பறந்து போயிடுச்சு. அதுக்கு அப்புறம் தான், டாக்ஸ் வாங்குனோம். இப்போ, ஒரு ராட்வீலர், பொமரேனியன் (ரோஸி), ஒரு நாட்டு பூனை (பிளாக்கி), ரெண்டு சன்கனுார் பேர்ட்ஸ் (சிண்டு), ரெண்டு சுகர்கிளேடர்-னு (நானா,நானி), வீடு நிறைய பெட்ஸ் இருக்கு.

இதுல, ரோஸி கேர்ள்ங்கறதால, எனக்கு ரொம்ப ஸ்பெஷல். இவளை குளிப்பாட்டி, பொட்டு வச்சி அழகுப்பார்ப்பேன். எப்பவும் என்கூடவே தான் இருப்பா. துாங்கும் போது கூட, என் தலையணை தான் ரோஸிக்கும். பிளாக்கிய கொஞ்சுனா, ரோஸிக்கு கோபம் வந்துடும். இதேமாதிரி, பேர்ட்ஸ், சுகர்கிளேடர்ஸ்-னு எல்லாத்துக்கும் நான் தான் புட் கொடுப்பேன். தண்ணீர் வைப்பேன்.

என்னோட குரல் கொஞ்ச நேரம் கேக்கலைன்னா கூட, சிண்டுஸ் கத்த ஆரம்பிச்சிடும். என் கணவர், பையன் ரெண்டு பேரும் வேலைக்கு போறதால, வீட்டுல தனிமையில இருக்கற பீலிங்கே தெரியாம, இவங்க தான் பாத்துக்குறாங்க. இவங்க கூட இருக்கறதால, இப்போ நான் ரொம்ப பிஸி.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us