Dinamalar-Logo
Dinamalar Logo


/வாராவாரம்/செல்லமே/நீங்க 'டாக் லவ்வரா' பண்ணாதீங்க ஓவரா!

நீங்க 'டாக் லவ்வரா' பண்ணாதீங்க ஓவரா!

நீங்க 'டாக் லவ்வரா' பண்ணாதீங்க ஓவரா!

நீங்க 'டாக் லவ்வரா' பண்ணாதீங்க ஓவரா!

ADDED : ஜூன் 29, 2024 08:18 AM


Google News
Latest Tamil News
மதுரை, துரைசாமி நகர்ல, 15 வருஷமா ஒரு குறிப்பிட்ட ப்ரீட் வளர்க்குறதோட இல்லாம, தன்னோட பேரையே, தன் செல்லத்துக்கும் வச்சிருக்காருன்னு கேள்விப்பட்டதும் ஆச்சரியத்துடன் நேரில் விசிட் அடித்தோம்.

வாசலில் இருவரும் வரவேற்றனர். ஒருவர் புன்னகையால். மற்றொருவர் ஏரியாவுக்கு புதுசு போலங்கற மைண்ட் வாய்ஸில், சுட்டித்தனத்துடன்... ஒரு வழியாக, குட்டி சதீஷை விளையாட விட்டு, உரிமையாளர் சதீஷிடம் பேசினோம்.

இந்த ப்ரீட் மேல ஏன் இவ்ளோ கிரேஸ்?

ஜெர்மன் ஷெப்பர்ட், ஓனரோட ஈஸியா அட்டாச் ஆகிடும். சின்ன வயசுல பக்கத்து வீட்டுக்காரர், இந்த ப்ரீட் வளர்த்தார். துறுதுறுன்னு விளையாடிட்டே இருக்கும். அதை பார்த்தே வளர்ந்ததால, இந்த ப்ரீட் மேல கிரேஸ் அதிகமாகிடுச்சு. 15 வருஷமா நானும் இந்த ப்ரீட் வளக்குறேன்.இதோட ஸ்பெஷாலிட்டியே, ஓனரோட ஆர்டருக்கு கீழ்படியும். ரொம்ப விசுவாசமாகவும் நடந்துக்கும். வீட்டுக்கு யாராவது புது ஆட்கள் வந்தா, உடனே தாவுறது, கடிக்க போறதுன்னு எந்த அக்ரசிவ் மூட்லயும் இருக்காது. அப்படியே குரைச்சாலும், 'அமைதியா இரு'ன்னு ஓனர் சொன்னா உடனே ரெஸ்பான்ஸ் பண்ணும். மத்த வகை நாய்களை விட, புத்திசாலியும் கூட.

இதோட டயட் சார்ட் என்ன?

காலையில் கொஞ்சம் பெடிகிரி, 2 முட்டை. மதியம் தயிர் மட்டும் சாப்பிடும். ஈவினிங்ல சிக்கன் ரைசை வெளுத்து கட்டுவார். டெய்லி, மார்னிங், ஈவினிங் வாக்கிங் கூட்டிச் போறதால, எவ்ளோ சாப்பிட்டாலும், ஓவர் வெயிட் போடுறதில்லை. எல்லா க்ளைமேட்டுக்கும் ஈஸியா அடாப்ட் ஆகிடும்.

புதுசா நாய் வளர்ப்பவர்கள், புரிந்து கொள்ள வேண்டிய முக்கியமான விஷயம், அதோட டைம் ஸ்பென்ட் பண்ணணும்கிறது தான். இல்லாட்டி அது ஸ்ட்ரெஸ் ஆகி அக்ரசிவ்வா மாறிடும். பப்பில இருந்து வளர்க்கும் போது, நம்ம வீடு, சுற்றுச்சூழல ஈஸியா புரிஞ்சிக்கும்.என்னதான் டாக் லவ்வரா இருந்தாலும், ஓவரா செல்லம் கொடுக்க கூடாது.

அப்புறம் அதோட மைண்ட்ல, 'நாம தான் இந்த வீட்டுக்கு ராஜா. இவங்க சொல்றத நம்ம என்ன கேக்கறது' ங்கற எண்ணம் வந்துடும். அதனால் அதை அதட்டவும் செய்யணும், அன்பாகவும் பார்த்துக்கணும். வேலை முடிச்சிட்டு, டயர்டா வீட்டுக்குள்ள நுழையும் போது, என்னோட சத்தத்தை கேட்டு, ஓடி வந்து ஹக் பண்ணும் போது, எல்லா ஸ்ட்ரெஸ்-வும் பறந்து ஓடிடும்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us