மரம் மட்டுமல்ல... சில மனிதர்களும் பறவைகளின் புகலிடமே!
மரம் மட்டுமல்ல... சில மனிதர்களும் பறவைகளின் புகலிடமே!
மரம் மட்டுமல்ல... சில மனிதர்களும் பறவைகளின் புகலிடமே!
ADDED : ஜூன் 08, 2024 09:22 AM

பொதுவா, ஸ்கூல், ஒர்க்கிங் பிளேஸ்காக வீடு மாத்தறவங்கள பார்த்துருப்பீங்க. ஆனா வடவள்ளியில ஒரு பெண்மணி, பேர்ட்ஸ்க்கு, நேச்சுரலான சூழல் வேணும்னு, வீடு மாறிட்டு இருக்கறதா கேள்விபட்டதும் நேரில் சென்றோம். பெயர் ரீனா கார்த்திக். தனியார் மருத்துவமனையில் அட்மின் ஒர்க்கில் பிஸியாக இருந்த இவரிடம், நம்மை அறிமுகப்படுத்திக்கிட்டதும், பறவையை போலவே சிலிர்ப்போடு பேச ஆரம்பித்தார்.
''நாங்க வீட்டுக்குள்ளே, முயல், வாத்து, கோழி, மீன் வளர்த்துருக்கோம். எங்களுக்கு ஒரு ரூம் இருந்தா போதும். மத்த இடமெல்லாம், பெட்ஸ்க்கு தான். வாத்துக்கு வீட்டுக்குள்ளே, குளம் மாதிரி செட் அப் பண்ணேன். இப்போ, பேர்ட்ஸ் தான் பேவரட். என் கணவரும், பேர்ட் லவ்வர். ஏழு வருஷத்துக்கு முன்னாடி ஒரு காக்கட்டூ வாங்குனோம். இப்போ எங்ககிட்ட, கிரே பேர்ட், சினகல், கைக்கூ, பேரட்லெட், ஆல்பினே காக்டெய்ல், பிஞ்சர்ஸ்...னு 13 வெரைட்டி பேர்ட்ஸ் இருக்கு,'' என்றார்.
இத்தனை வெரைட்டியா என்றதும், ''ஒரு பேர்ட் வாங்கி வளர்த்துட்டா, வித்தியாசமான ப்ரீட்ஸ் வாங்கணும்னு ஆசை வந்துடும். இதுக்கு தனித்தனியா பேரு வச்சிருக்கோம். என்னோட எல்லா உணர்வுகளையும் இவங்க புரிஞ்சிக்குவாங்க. எவ்ளோ ஸ்ட்ரெஸ் இருந்தாலும், வீட்டுக்குள்ள வந்து, இவங்கள பார்த்துட்டா, மைண்ட் பிரஷ் ஆகிடும்.
இதுலயும், இந்த கிரே பேர்ட்க்கு, என்மேல ரொம்ப பொசசிவ். வேற பேர்ட்ஸ கொஞ்சினா கூட, கோபத்துல சத்தம் போடும். இந்த சினகல் பேரு மிலா. இவளோட, கிரீன் ஆரஞ்ச் கலர்காமினேஷன், ரொம்ப யுனிக்கா இருக்கும். சத்தமே போடாம, சமத்துக்குட்டியா நடந்துக்கும். அப்பார்ட்மெண்ட்ல குடியிருக்கறவங்களுக்கு, சினகல் தான் பெஸ்ட் சாய்ஸ். இந்த ப்ளூயி தான், உலகத்துலயே குட்டியான பேர்ட்டான, பேரட் லெட். நேச்சுரலான சூழல் இருந்தா, ரொம்ப ஹாப்பியா இருக்கும். இவங்களுக்காகவே, கடந்த ஏழு வருஷத்துல, 10 வீடு மாத்திட்டோம்,'' என்றார்.
இதோட பராமரிப்பு பத்தி...
'' பேர்ட்ஸ் பராமரிக்கறது ரொம்ப ஈஸி. சிறுதானியங்கள், நட்ஸ், முளைகட்டிய பயிறுன்னு சில அயிட்டங்களை தான் விரும்பி சாப்பிடும். இது விளையாடுறதுக்கு, ஊஞ்சல், பிளாஸ்டிக் ட்ரீ ரெடி பண்ணியிருக்கோம். இது ஸ்ட்ரெஸ்ல இருந்தா, தன்னோட இறக்கையை பிச்சிக்கும். அப்போ, ஓனர் அதோட டைம் ஸ்பென்ட் பண்ணணும்,'' என்றார். பேசிட்டு இருக்கும் போதே, இறக்கை விரிச்சி பறந்து வந்த கிரே பேர்ட்டு, ரீனாவோட தோள்ல நின்னதும், மற்ற பறவைகளும், சிறகை விரித்தன.
''பறவைகளுக்கு புகலிடம், மரங்கள் மட்டுமல்ல சில மனங்களும் தான்...!''