டாக்டர்'ஸ் கார்னர்: ஸ்ட்ரெஸ் வராம பாத்துக்கணும்!
டாக்டர்'ஸ் கார்னர்: ஸ்ட்ரெஸ் வராம பாத்துக்கணும்!
டாக்டர்'ஸ் கார்னர்: ஸ்ட்ரெஸ் வராம பாத்துக்கணும்!
ADDED : ஜூன் 15, 2024 08:11 AM

புதிதாக ஆமை வாங்கியிருக்கேன். இதை எப்படி பராமரிப்பது?
- ம.அகிலா, கோவை.
ஆமை பொறுத்தவரை 20-- 150 வருடம் வரை வாழும், நீர் மற்றும் நில வாழ் உயிரினம். இதை வீட்டில் வைத்து வளர்ப்பவர்கள், அதன் உடல் வெப்பநிலையை (25---27°C) சீராக வைத்திருப்பது அவசியம். இதன் டேங்கில், குளோரின் கலக்காத சுத்தமான தண்ணீர் மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
கமர்ஷியல் உணவுடன் மீன், கேரட், கீரைகள் போன்ற உணவுகளும் சாப்பிட கொடுக்கலாம். தினமும், காலை, மாலை வேளையில், சூரிய வெயிலில் (1--2 மணி நேரம்) வைத்திருப்பது நல்லது. தோட்டம் மாதிரியான வெளியிடங்களில் வைத்து வளர்ப்பவர்கள் குடற்புழு நீக்கம் செய்து கொள்ள வேண்டும். தினசரி உணவு எடுத்து கொள்வது, கழிவுகளை வெளியேற்றுவது, அவற்றின் தோள் மற்றும் ஓடு பளபளப்பு, கண்கள், மற்றும் மூக்குப்பகுதி, மூச்சு விடுதலின் அளவீடு ஆகியவற்றை கவனிக்க வேண்டும்.
இதில் ஏதேனும் மாற்றம் இருந்தால் உடனடியாக கால்நடை மருத்துவரை அணுக வேண்டும். மேலும், ஆமையை கோபப்படுத்தும் போது, அவை கடிக்கவும் வாய்ப்புள்ளது.- பெ.அஞ்சலிதேவி,கால்நடை மருத்துவர், கோவை.