ADDED : ஜன 14, 2024 03:40 PM

தொலைந்த நாயைத்தேடி, தமிழக போலீஸ், பக்கத்து மாநிலத்துக்குப் போய் தேடியது. லேட் டஸ்ட் பிரேக்கிங் நியூஸ் பேப்பரில் விளம்பரம், ரோட்டிலே போஸ்டர், சோஷியல் மீடியாவில் போஸ்ட் என பலவற்றிலும் தொலைந்த செல்லங்களைத் தேடும் பலரின் பதைபதைப்பும், பாசமும் தெரிகிறது.
இனிமேல் உங்க வீட்டு செல்லம் எங்கே தொலைத்தாலும் கண்டுபிடித்து விடலாம். நாய், பூனைகளக்கு அவற்றின் உடலில் மைக்ரோசிப் பொருத்தும் நடைமுறை வந்து விட்டது. அதை ஸ்கேன் செய்யும் பொழுது, செல்லப் பிராணியின் இனம், அதன் பெயர், உரிமையாளர் பெயர் உள்ளிட்ட அனைத்து தகவல்களும் கிடைக்கும். செல்லப் பிராணிகள் தொலைந்து போனாலோ, கடத்தப்பட்டாலோ, 'சிப்' வைத்து 'கப்' எனப் பிடித்து விடலாம்.
இந்த மைக்ரோசிப்பில் அந்த செல்லப்பிராணியின் இனம், அதன் பெயர், உரிமையாளர் பெயர், தொடர்பு எண் உள்ளிட்ட அனைத்து தகவல்களும் பதிவு செய்யப்பட்டிருக்கும். இந்த சிப் அருகே அதற்கான 'டிடெக்டர்' வாயிலாக, ஸ்கேன் செய்யும்போது, தகவல்கள் கிடைக்கும். இதன் வாயிலாக செல்லப்பிராணிகள் தொலைந்து போகும் போது அவற்றை எளிதில் அடையாளம் கண்டு அவற்றை உரிமையாளர்களிடம் ஒப்படைக்க முடியும். இந்த மைக்ரோசிப், 'இன்டே பெட் அனிமல்ஸ் வெல்பேர் சொசைட்டி (ஐபாஸ்)' பிராணிகள் நல சங்கம் சார்பில் கால்நடை டாக்டர்கள் வாயிலாக பொருத்தப்படுகிறது.