ஜூலை 13, 14 கோவையில் பூச் பார்ட்டி!
ஜூலை 13, 14 கோவையில் பூச் பார்ட்டி!
ஜூலை 13, 14 கோவையில் பூச் பார்ட்டி!
ADDED : ஜூன் 29, 2024 08:09 AM

உங்க பெட்ஸோட மறக்க முடியாத அனுபவங்களை அள்ளித்தர, 'லே ஷீரோ' நிறுவனம், கோவையில் வர்ற 13, 14ம் தேதிகள்ல, பூச்பார்ட்டி நடத்துறாங்க.
உங்க செல்லக்குட்டியோட ஜாலியான, பன் புல்லான மெமரிஸ் கிரியேட் பண்ணணும்னு ஆசைப்படுறவங்க, கோவை, மத்திப்பாளையம், சி.எஸ்.ஆர்., ரெசார்ட்ல நடக்குற, இந்த பூச்பார்ட்டில கலந்துக்கலாம். இங்க, டிரெண்டான டிரஸ் காம்போல நீங்களும், உங்க பப்பியும் வலம்வர்றதுக்கு, பேஷன் ஷோ நடக்குது. கிட்ஸ் கேம்ஸ், அடாப்டிங் டிரைவ், பன் ஆக்டிவிட்டிஸ், புட் பெஸ்டிவல்-னு ரெண்டு நாளும், கொண்டாட்டத்துக்கு பஞ்சமிருக்காது.
உங்களுக்கான டிரஸ், பேஷன் ஸ்டால், பெட்ஸ்க்கான ஸ்டால்ஸ்-னு, பர்சேஸ் பண்றதுக்கு, எக்கச்சக்க விஷயங்கள் இருக்குது. உங்க பப்பியோட சேட்டைகளை, மத்த பெட் லவ்வர்ஸோட பகிர்ந்துக்கறதுக்கான, கெட் டூ கெதர் பார்ட்டி மாதிரியும், ஏற்பாடு பண்ணியிருக்காங்க. நுழைவு கட்டணம் வெறும், 99 ரூபாய் மட்டுமே. 'தினமலர்' நாளிதழ், இந்த ஈவன்ட்டுக்கு, மீடியா பார்ட்டனரா கைக்கோர்க்குது. குட்டீஸோட குஷியா இந்த பார்ட்டில கலந்துக்க ரெடியாகுங்க. கூடுதல் விபரங்களுக்கு: leshiro.india@gmail.com / 90928 78000.