Dinamalar-Logo
Dinamalar Logo


/வாராவாரம்/செல்லமே/சர்வதேச சாகச மேடை கோவையிலிருந்து வீரநடை!

சர்வதேச சாகச மேடை கோவையிலிருந்து வீரநடை!

சர்வதேச சாகச மேடை கோவையிலிருந்து வீரநடை!

சர்வதேச சாகச மேடை கோவையிலிருந்து வீரநடை!

ADDED : ஜூன் 29, 2024 08:07 AM


Google News
Latest Tamil News
இந்தியாலயே, இண்டர்நேஷனல் சேம்பியன் டைட்டில் அடிச்ச பெல்ஜியம் ஷெப்பர்ட் ப்ரீட், கோவை, காளப்பட்டியில் தான் இருக்குன்னு கேள்விப்பட்டதும், அட்ரஸ் விசாரிச்சு நேரில் சென்றோம்.

கிராஸ் கிரவுண்டு, இன்டோர், அவுட் டோர் பிளே ஏரியா, வால் க்ளைம்பிங், ஸ்விம்மிங் பூல், பிரைவேட் ரன் வே, ஏசி ரூம்-னு, 60 சென்ட் இடத்துல, ஐடி ஆபிஸ் லுக்ல, ஹை-பையா இருந்துச்சு,'ஷெமீக் கே9' டிரைஜனிக் அகாடமி. டாக்ஸ் ட்ரைன் பண்ண இவ்ளோ வசதிகளா என்றதும், அதை ஆமோதிப்பது போல தலையசைத்து பேச துவங்கினார், ஷெமீக்.

''என்கிட்ட இப்போ, 10 பெல்ஜியம் ஷெப்பர்ட் இருக்கு. எல்லாமே ஷோ ப்ரீட். இதுல, 'ஷாடோ', 'ஷாஷா' ரெண்டுமே, இண்டர்நேஷனல் சேம்பியன் டைட்டில் அடிச்சிருக்கு. ஒபீடியன்ஸ், சேம்பியன்னு, ரெண்டு டைட்டில் அடிச்ச, ஒரே ப்ரீட் இவங்க தான். இதுதவிர, நேஷனல் சேம்பியன்-னு நிறைய டைட்டில் வாங்கியிருக்காங்க.

இதோட வாரிசுகள், 'ஸ்னைப்பர்', 'ஸ்பைகி', 'ஷூட்டர்' மூணுமே, ஒபீடியன்ஸ் ஷோ டைட்டில் வின்னர்ஸ். நிறைய ஷோல, 'பெஸ்ட் ஆப் ப்ரீட்' டைட்டில் அடிச்சிருக்கு. ஷூட்டரோட பப்பி 'ஸ்பேடு', ஷோக்கு தயாராகிட்டு இருக்கான். இப்படி சேம்பியன்ஸோட மூணு தலைமுறை பிளட் லைன் இருக்கறதால, குவாலிட்டியான பெடிகிரி டெவலப் பண்றதுக்கு தான், இந்த செட் அப் ரெடி பண்ணேன்.

ஒபீடியன்ஸ் ட்ரைனிங் ஸ்டார்ட் பண்றதுக்கு முன்னாடி, பப்பிக்குன்னு சில டெஸ்ட் இருக்கும். அப்புறம் தான் ட்ரைனிங் கிளாஸ் தொடங்கும்.

என்ன ட்ரைனிங் கொடுப்பீங்க?

இதுவரைக்கும், 100க்கும் மேல பப்பி சேல் பண்ணியிருக்கேன். என்கிட்ட இருந்து வாங்குன பப்பியை மட்டும் தான் ட்ரைன் பண்றேன். வேற ப்ரீடா இருந்தா, அதுக்கு சில டெஸ்ட் இருக்கு. பேசிக்கா ஹோம் ஒபீடியன்ஸ் பண்றதுக்கு, பொறந்து 4 மாசத்துல இருந்து தொடங்கலாம்.ஷோ ப்ரீடா இருந்தா,

குறைஞ்சது 6 மாசத்துல இருந்து ஒரு வருஷத்துக்கு ட்ரைனிங் கிளாஸ் இருக்கும். அட்வான்ஸ் மாடர்ன் சயின்ஸ் மெத்தட்ல, டெய்லி ட்ரைனிங் கொடுப்போம். நிறைய ஒர்க் அவுட் இருந்தா சீக்கிரம் டாக்ஸ் சோர்ந்துடும். இன்டர்நேஷனல் லெவல்ல, ஒரு ஷோல இருக்கற, எல்லா ஸ்போர்ட்ஸ் அயிட்டங்களும் இங்க இருக்கு. முறையா பயிற்சி கொடுக்கறதால, 60க்கும் மேல, ஷோ ப்ரீட்ஸ் உருவாக்கியிருக்கேன்.

பெல்ஜியம் ஷெப்பர்டோட சிறப்பு என்ன?

இந்த ப்ரீட் வெளிநாடுகள்ல, மிலிட்டரி, ஒர்க்கிங், கார்டிங்-னு பயன்படுத்துறாங்க. இந்தியால, அதுவும் கோயமுத்துார்ல, இதேமாதிரியான பெடிகிரி குவாலிட்டிய உருவாக்கணும்னு முடிவெடுத்தேன். இதனால உருவானது தான், 'ஷெமீக் கே9' டிரைஜனிக் அகாடமி. அடுத்ததா அமெரிக்கன் ஸ்போர்ட், புரொடெக் ஷன் ஸ்போர்ட் அசோசியேஷன் உருவாக்கணும். என்னோட ப்ரீட்ஸ, கோயமுத்துாரோட பிரதிநிதியா, உலகத்துல நடக்கற எல்லா டாக் ஷோலயும் கலந்துக்க வச்சி, மெடல் அடிக்கணும்.இப்படி கூட, பொறந்த ஊருக்கு பெருமை சேர்க்கலாம் போல இருக்கே!





      Our Apps Available On




      Dinamalar

      Follow us