ADDED : ஜன 08, 2024 01:48 PM

ஊட்டியை சேர்ந்த, 'உலகளாவிய வெட்னரி அமைப்பின்' (டபிள்யூ, வி.எஸ்) நிர்வாகி எலனா ஓட்டர் கூறுகையில், செல்ல பிராணிகளை, வளர்க்க வேண்டுமெனில், முதலில் நீங்கள் எதனை வளர்க்க முடியும் என்பதை உங்கள் சூழலுக்கு ஏற்ப தீர்மானிக்க வேண்டும்.
நாய்களை வளர்க்க வேண்டுமெனில், அவற்றை வாங்கிய பின்பு, உடல் பரிசோதனை செய்த, தடுப்பூசி போட வேண்டும். இதனை பரிமாரித்து வளர்க்க நாள்தோறும் நேரம் ஒதுக்க வேண்டும்.
பறவைகள் உட்பட பிற செல்ல பிராணிகளை வளர்க்க விரும்பினால், அரசின் விதிகளை கட்டாயம் பின்பற்றி, அனுமதி உள்ளவற்றை மட்டும் வளர்க்க வேண்டும்.
எந்த பிராணிகளை வளர்க்க தேர்வு செய்தாலும் அதனை பற்றி விபரங்களை முழுமையாக படித்து, அவற்றுக்கான வளரும் சூழல் இருந்தால் மட்டுமே வாங்க வேண்டும்.
பலர் வளர்ப்பு பிராணிகளை ஆசைக்கு வாங்கி, சில நாட்களில் அவற்றை பராமரிக்க முடியாமல் தெருவில் விடுகின்றனர். அத்தகைய சூழ்நிலைகளை ஏற்படுத்த கூடாது. அதற்கான காப்பகங்களில் விட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.