Dinamalar-Logo
Dinamalar Logo


/வாராவாரம்/விருந்தினர் பகுதி/ 'மிஸ் தமிழ்நாடு' கிறிஸ்லின் இமிமா

'மிஸ் தமிழ்நாடு' கிறிஸ்லின் இமிமா

'மிஸ் தமிழ்நாடு' கிறிஸ்லின் இமிமா

'மிஸ் தமிழ்நாடு' கிறிஸ்லின் இமிமா

ADDED : செப் 21, 2025 05:32 AM


Google News
Latest Tamil News
இ ருபத்திரண்டு வயதிற்குள்ளாகவே மாடலிங், ஆக்டிங், ஆங்கரிங், நியூஸ் ரீடிங், பியூட்டி கான்டெஸ்ட் ஜூரி, டான்ஸர் என பல பரிமாணங்களில் மிளிர்பவர். தற்போது தனியார் நிறுவனமொன்றில் எச்.ஆர்., ஆக பணிபுரிகிறார். மிஸ் தமிழ்நாடு பட்டம் வென்றுள்ள மதராஸி மிஸ் திவ்யா, மிஸ் அன்ட் வே என பட்டங்களையும் பெற்றிருக்கிறார். விளம்பர படங்களில் நடித்திருப்பதுடன் ஒரு பாடல் ஆல்பம், சில குறும்படங்களிலும் நடித்து முடித்திருக்கிறார்.

டீரீம்ஜோன் டிசைனர் வாக், வைப்ஸ் 360 பேஷன் ேஷா, பெமினா பேஷன் வாக், வாலன்டைன்ஸ் டே பேஷன் ேஷா என இவரது ரேம்ப்வாக் இடம் பெறாத இடங்களே இல்லை.

பாட்மின்டன், நீச்சல், கவிதை என இவர் தொடாத துறைகளே இல்லை. தமிழ், ஆங்கிலம் முழுமையாக, ஹிந்தி, பிரெஞ்ச், ஸ்பானிஷ், ஜெர்மன் ஒரளவு பேச தெரியும் என்கிறார்.

யுவ ஸ்ரீ கலா பாரதி உள்ளிட்ட விருதுகள் இவருக்கு பெருமை சேர்த்துள்ளன. இந்த பெருமைகளுக்கு சொந்தக்காரர் சென்னையைச் சேர்ந்த கிறிஸ்லின் இமிமா.

தினமலர் சண்டே ஸ்பெஷலுக்காக இவரே தொடர்கிறார்...

பெற்றோருக்கு பூர்வீகம் திருநெல்வேலி, அப்பாவின் பணிநிமித்தமாக சென்னையில் வசிக்கிறோம். பி.இ., எம்.பி.ஏ., முடித்துள்ளேன்.

கல்லுாரியில் படித்த போது பக்கத்து வீட்டு அக்கா ஒரு விழாவிற்காக மாடலிங் செய்ய அழைத்தார். அப்போது மாடலிங் பற்றி ஐடியா இல்லை. அந்த அக்காவே தேவையான டிரஸ் உள்ளிட்ட பொருட்களைவாங்கி வைத்திருந்தார். அவர் அணிய சொன்னதை அணிந்து அவர் செய்து விட்ட மேக்கப்பை செய்து கொண்டு மாடலிங் செய்தேன். எதிர்பாராத அளவுக்கு கிடைத்த கைதட்டல்கள் சந்தோஷத்தை தந்தன. அதுபோல மற்றொரு விழாவிலும் ஆள் இல்லை என மாடலிங் செய்ய என்னை அழைத்தனர். இப்படி துவங்கி மாடலிங், ரேம்ப் வாக் செய்ய அதுவே வாடிக்கையாகி விட்டது.

மாடலிங், பேஷன் ேஷாவுக்கு என்ன செய்ய வேண்டும் என புத்தகங்களை படித்து தெரிந்துகொண்டு சில தனி வகுப்புகளிலும் சேர்ந்தேன்.

தமிழக அரசின் கலை பண்பாட்டுத்துறை சார்பில் நடந்த நிகழ்வுகளில், கின்னஸ் வேல்ர்டு ரிக்கார்ட், ஆசியா புக் ஆப் ரிக்கார்ட்ஸ், கலாம் புக் ஆப் ரிக்கார்ட்ஸ் படைத்ததை மறக்க முடியாது. சர்வதேச அளவிலான ரேம்ப்வாக், மாடலிங் செய்ய வேண்டும் என்ற முனைப்பு உள்ளது.

முந்தைய தலைமுறை போலின்றி இன்று பெண்கள் தைரியமாக செயல்படுகின்றனர். மாடலிங் என்றால் முன்பு பெற்றோரே தயங்குவர். இன்று நிலைமை மாறியிருக்கிறது.

நவீன யுகத்திற்கு ஏற்ப மாடலிங் துறை வளர்ச்சி பெற்றுள்ளது. பிரின்ட் மாடல், ரன்வே, பியூட்டி மாடல் என சாதிக்க வாய்ப்புகள் ஏராளமாக உள்ளன.

பெண்கள் சுயமாக(பிரீலேன்ஸ்) தாங்களாகவே இப்போட்டிகளில் பங்கேற்கலாம், ஏதாவது ஏஜன்ஸி சார்பிலும் பங்கேற்கலாம். போட்டிகளில் பங்கேற்க முகம், முடி, உடல் என எல்லாவற்றிலும் கவனம் செலுத்த வேண்டும். குண்டாக இருக்க கூடாது. முடி மென்மையாக நீளமாக வேண்டும். தற்போது 'டஸ்கி' கலரிலுள்ளவர்கள் சாதிப்பது சந்தோஷமாக உள்ளது.

நம்மால் முடியாதது எதுவும் இல்லை. நாம் என்ன ஆக வேண்டும் என நினைக்கிறோமோ அதை மனதில் உள்வாங்கி கொண்டு சிந்தனை, செயல் என இறங்கினால் போதும். நாமும் சாதனையாளர் தான் என அவருக்கே உரித்தான பாணியில் சிரித்தவாறு விடைபெற்றார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us