நாங்க என்ன சொல்றோம்னா..: வீர தீர சூரன் பாகம்: 2

PUBLISHED ON : மார் 30, 2025

அந்த ஒரு சம்பவமும் இன்னபிற சம்பவங்களும்!
'அந்த ஒரு சம்பவம்' காரணமாக ரவி மற்றும் கண்ணனை என்கவுன்ட்டரில் தீர்த்துக்கட்ட நினைக்கிறார் காவல் அதிகாரி அருணகிரி. 'அந்த ஒரு சம்பவம்' செய்த காளியிடம் அருணகிரியை கொல்ல நிபந்தனை வைக்கிறார் ரவி. கட்டாயத்தின் பேரில் இதில் தலையிடும் காளி செய்யும் புது சம்பவமே கதை; இவ்வளவும் ஓர் இரவில்!
ஒரு தரப்பு மற்றொரு தரப்பை விரட்டுவதாகவே நீள்கின்றன பெரும்பாலான காட்சிகள். இந்த விரட்டல், பதுங்குதலுக்கு மத்தியில், 'அந்த ஒரு சம்பவம்' பற்றி ஆளாளுக்கு ஒரு பீடிகை போடுகின்றனர். 'அது பற்றி தெரிந்தால் தான் நடப்பவை புரியும்' என்கிற கட்டாயமின்றி விரியும் காட்சிகள், வசனங்களால் விறுவிறுப்புடன் நகர்கிறது முதல் பாதி!
வறண்டு கெட்டி தட்டிப்போன கதைக்களம்; ஆனால், தேக்கமின்றி நகரும் திரைக்கதையால் வறட்சியின் பாதிப்பு பாதியாக குறைக்கப்பட்டிருக்கிறது. 'நேரடி ஒளிபரப்பு' உணர்வைத் தரும் கத்தரிக்கப்படாத நீள காட்சிகள் மாறுபட்டு இருப்பினும் பெரிதாக ஈர்க்கவில்லை!
துஷாரா உடனான ஜோடிப் பொருத்தத்தில் ஓட்டை இருப்பினும் அதை மறைத்து நிற்கிறது விக்ரமின் அனுபவ நடிப்பு. கடிவாளமிட்ட குதிரையாக எஸ்.ஜே.சூர்யா ஓடியிருப்பதும், சூரஜ் வெஞ்சரமூடுவின் 'டேக் இட் ஈஸி' வில்லத்தனமும் புதிதாக தெரிகின்றன!
'அந்த ஒரு சம்பவம்' குறித்த பீடிகைகளுக்கு நியாயம் செய்திருக்கிறது தேனி ஈஸ்வரின் ஒளிப்பதிவும், ஜி.வி.பிரகாஷின் பின்னணி இசையும்! இயக்கத்தில் வென்ற அருண்குமார் கதையாக்கத்திலும் வென்றிருந்தால், 'அடுத்த பாகம்' பற்றி கேட்டிருக்கலாம்.
ஆக...
உப்பு கரிக்கும் வீர தீர சூர சாம்பாரின் உவர்ப்பை உறிஞ்சும் உருளைக்கிழங்காய் விக்ரம்!