Dinamalar-Logo
Dinamalar Logo


/வாராவாரம்/அவியல்/ஏழரை கேள்விகள்

ஏழரை கேள்விகள்

ஏழரை கேள்விகள்

ஏழரை கேள்விகள்

PUBLISHED ON : ஏப் 06, 2025


Google News
Latest Tamil News
தங்கள் 'அப்பா'விடம் பதில் கேட்கும் இக்குழந்தைகளின் கேள்விகளை நீ சிந்தித்ததுண்டா தமிழகமே...

1. 'அங்கு துளசிதாசர் அளவில் இங்கு கம்பர் பேசப்படவில்லை' என்பது நம் கவர்னரின் வருத்தம். 'ராமாயணம் வால்மீகியின் கற்பனையே' என்ற கருணாநிதி அளவில் இங்கு கம்பர் பேசப்படாததன் பின்னணி யார் அப்பா?

2. 'கல்வியால் உலகை வெல்ல அரசுப்பள்ளிகளே தலைசிறந்த அடித்தளமிடும்' என்கிறார் அமைச்சர் மகேஷ். பிளஸ் 2 இறுதி தேர்வு நாளில் அரசுப் பள்ளிகளுக்கு காவல் துறை பாதுகாப்பு அளித்தது ஏன் அப்பா?

3. 'வேறு கட்சிகளோடும் இணையும் வாய்ப்புகள் உள்ளதை உறுதிப்படுத்திக் கொண்டே இருக்க வேண்டும்' என்று அரசியல் புலமை காட்டும் திருமாவளவனது கட்சிக்கு, மிச்சமிருக்கும் ஆட்சியில் பங்கு உண்டா அப்பா?

4. '2015ல் மாவோயிஸ்ட் பிரச்னை இருந்த இந்திய மாவட்டங்கள் 35, தற்போது 12; 'மாவோயிஸ்ட் தீவிரவாதம் மார்ச் 31, 2026க்குள் வேரறுக்கப்படும்' என்கிறார் அமித் ஷா; மத்திய அரசு சாதித்து வருகிறதா அப்பா?

5. 'கோடையில் பறவைகளுக்கு நீரும் உணவும் கொடை அளிப்போம்' என்ற பதிவு பார்த்து சிலிர்க்கும் மனங்கள், 'சீரழிவு தரும் டாஸ்மாக் இன்று முதல் இயங்காது' எனும் பதிவையும் எதிர்பார்க்கும்தானே அப்பா?

6. அமலாக்கத்துறை தொடுக்கும் வழக்குகளை பா.ஜ.,வோடு இணைத்து பேசும்போதெல்லாம், 'வழக்கு தொடுப்பது அரசியல் கட்சியின் வேலை அல்ல' என்று காங்கிரஸின் ப.சிதம்பரம் சொன்னது நினைவிற்கு வருமா அப்பா?

7. 'கொரோனா' காலத்தில் பணியாற்றி பலியான அரசு மருத்துவர் விவேகானந்தனின் மகள், 'அப்பா...' என்றபடி வைத்த கோரிக்கை நினைவிருக்கிறதா அப்பா?

7½ 'குடும்ப நலன்' என்றால்...?





      Our Apps Available On




      Dinamalar

      Follow us