Dinamalar-Logo
Dinamalar Logo


/வாராவாரம்/அவியல்/வா வாசி யோசி...

வா வாசி யோசி...

வா வாசி யோசி...

வா வாசி யோசி...

PUBLISHED ON : ஏப் 20, 2025


Google News
Latest Tamil News
'அரசியலிலும் கலைத்துறையிலும் மட்டும்தான் தலைவர்களை தேட வேண்டும் என்பதில்லை... வழிகாட்டியாய் வாழும் அனைவருமே தலைவர்கள்தான்' என்கின்றனர் கோவை ரத்தினம் கலை அறிவியல் கல்லுாரியின் இம்மாணவியர்...

'என் தாய்மாமா கணேஷ், தன் 13 வயதிலேயே 'லேத்' பணிக்குச் சென்று குடும்ப பொறுப்பை ஏற்றிருக்கிறார். இன்று அவர், 'கம்ப்ரஸர் சர்வீஸ்' நிறுவனத்தின் உரிமை யாளர். மன உறுதி, திறமை, உழைப்பின் மூலம் என் குடும்பத்திலேயே ஒருவர் சாதித்து நிற்கையில் நான் ஏன் என் தலைவனை வெளியில் தேடப் போகிறேன்?'

- சு.மவிவர்ஷினி, விஸ்காம் துறை.

'பொன்னீஸ்வரி... 'ஆண் வாரிசு' மோகமுள்ள வீட்டின் மகள்; 19 வயதில் மனைவி; பலவித சங்கடங்களுக்கு ஆளாக்கப்பட்ட மருமகள்; 'டெய்லரிங், மேக்கப் பயிற்சி' என 365 நாளும் உழைத்த உழைப்பாளி; 'உனக்காக நீதான் போராட வேண்டும்' என்று உணர்த்தி மறைந்த என் தாயே... என் வழிகாட்டி!'

- கா.ஹம்ஸவர்த்தினா, ஜர்னலிசம் துறை.

'கல்லுாரியில் சேர்ந்த புதிதில் என் நிறத்தின் மீது எனக்கு தாழ்வு மனப்பான்மை. எனது உடல் நிறம் தெரிந்து விடாத அளவிற்கு உடை போர்த்தி இருப்பேன். இதை கவனித்த பேராசிரியர் ராஜு, 'நீ என்பது நிறம் அல்ல... உன் மனம்' என்றார். அதன்பின், 'பேஷன் ஷோ'க்களில் கலந்து கொண்டு பரிசு வென்றிருக்கிறேன். நன்றி ராஜு சார்!'

- ந.கீர்த்தனா, விஸ்காம் துறை.




      Our Apps Available On




      Dinamalar

      Follow us