Dinamalar-Logo
Dinamalar Logo


/வாராவாரம்/அவியல்/மனம் கொத்தி பறவை

மனம் கொத்தி பறவை

மனம் கொத்தி பறவை

மனம் கொத்தி பறவை

PUBLISHED ON : ஏப் 20, 2025


Google News
Latest Tamil News
கருப்பட்டி விற்பனையில் இனிக்க இனிக்க முன்னேறி வருகிறது இந்த 'ஸ்டார்ட்அப்' நிறுவனம்.

இந்த வார மனம்கொத்தி: ஹரி கண்ணன்

அடையாளம்: பாம் ஏரா

இருப்பிடம்: ஆறுமுகநேரி, துாத்துக்குடி

மென்பொருள் பொறியியல் நிபுணராக லட்சங்களில் ஊதியம் பெற்று உலகம் சுற்றியவர் 37 வயது கண்ணன். 'கொரோனா' சூழலில் 2020ல் ஊர் திரும்புகிறார். அன்றைய நிலையில்...

வீழ்ந்த மரம் விழித்த மனம்

வள்ளியூர், பெரியகுளம் பகுதியில் பனை மரங்கள் வீழ்த்தப்பட்ட ஒருநாள்... 'பனம் பழம் தேடி வர்ற காட்டு பன்றிகளால பயிர்கள் நாசமாகுது; இலவச குத்தகைக்கு இந்த பனைகளை தர்றேன்; நுங்கு வெட்டிக்கோ... பதநீர் இறக்கிக்கோ... பழம் மட்டும் விழாம பார்த்துக்கோ கண்ணா' - வயல் உரிமையாளர் இப்படிச் சொன்னதில் உதயமானது 'பாம் ஏரா' எனும் 'ஸ்டார்ட்அப்' சிந்தனை!

'சர்க்கரை, உப்பு மாதிரி ஒரு பிராண்டு உருவாக்கிட்டா மக்கள்கிட்டே கருப்பட்டியை கொண்டு போயிடலாம்'னு முடிவு பண்ணினேன். 'பனை யுகம்'னு அர்த்தம் தர்ற 'பாம் ஏரா' பெயர் முடிவாச்சு. குடும்பத்தோட சேர்ந்து 2021 பிப்ரவரியில கருப்பட்டி காய்ச்சினேன். ரூ.5 லட்சம் முதலீட்டுல ஒன்றரை மாதத்துல ஒரு டன் கருப்பட்டி ரெடி!'

நான் முளைத்தேன்

'உள்ளூர் விற்பனை போக மீதமானது 800 கிலோ கருப்பட்டி; உணவு தரச்சான்றிதழ், ஜி.எஸ்.டி., எண்ணோட 'அமேசான்' பக்கம் போனேன்; வியாபாரம் சிறப்புன்னாலும், 300 கிலோ கருப்பட்டி உருகி வீணாயிருச்சு; இரண்டு லட்சம் ரூபாய் நஷ்டம்; 'ஏன் இப்படி' ன்னு ரொம்ப தீவிரமா யோசிச்சேன்!'

விளைவு... 2022ல் கருப்பட்டியை உடைத்து துாள் ஆக்கியாயிற்று. 'ஓர் ஆண்டு ஆயுள் கொண்ட கருப்பட்டி துாள்' வியாபாரம் துாள் கிளப்ப, மத்திய அரசின் பி.எம்.எப்.எம்.இ., திட்டத்தில் ரூ.36 லட்சம் கடனும், ரூ. 10 லட்சம் மானியமும் பெற்று 2023ல் இயந்திரங்கள் மூலம் மதிப்புக் கூட்டு பொருள் உற்பத்தி துவக்கப்படுகிறது!

தமிழக அரசின் 'டான் சீட் 5'ல் விண்ணப்பித்து ரூ.15 லட்சம் நிதி உதவி பெற்ற பாம் ஏராவின் தற்போதைய ஆண்டு வருமானம், ரூ.50 லட்சம். துாத்துக்குடி ஆறுமுகநேரியில் உற்பத்திக்கூடம், 14 ஊழியர்கள், நவீன இயந்திரங்கள், பனை மீது நம்பிக்கை கொண்ட தொழிலாளர்கள், 'ஆன்லைன்' மற்றும் நேரடி விற்பனை, வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி எனும் இந்த பலத்துடன்...

'மூன்று கோடி ரூபாய் ஆண்டு வருமானம் இலக்கு' என்கிறார் கண்ணன்.

www.thepalmera.in

மனதில் இருந்து...

'பாம் ஏரா'வோட

* கருப்பட்டி பவுடர்

* கருப்பட்டி பைட்ஸ்

* கருப்பட்டி மக்ரூன்

* கருப்பட்டி மால்ட்

* பனங்கிழங்கு பவுடர்

ஹெல்த் மிக்ஸ் எல்லாம் ருசியில எங்களுக்கு பெரும் திருப்தி தருது!'

- கீர்த்திகா, சென்னை.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us