/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/சின்னசேலம் வாசவி கிளப் சிறப்பு முகாம்சின்னசேலம் வாசவி கிளப் சிறப்பு முகாம்
சின்னசேலம் வாசவி கிளப் சிறப்பு முகாம்
சின்னசேலம் வாசவி கிளப் சிறப்பு முகாம்
சின்னசேலம் வாசவி கிளப் சிறப்பு முகாம்
ADDED : ஜூலை 19, 2011 12:20 AM
சின்னசேலம் : சின்னசேலம் வாசவி கிளப், வனிதா கிளப் இணைந்து நலத் திட்டப் பணிகளை மேற்கொண்டனர்.
சின்னசேலம் வரதராஜ பெருமாள் கோவிலில் தூய்மை படுத்தும் பணி, அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் இலவச அக்குபஞ்சர் மருத்துவ முகாம், பள்ளி வளாகத்தில் மரக் கன்றுகள் நடும் நிகழ்ச்சி, ரயில் நிலையத்தில் பிளாட்பார வரிசை எண் போர்டு அமைத்தல் மற்றும் நயினார்பாளையம் செயின்ட் பால் பள்ளியில் மரக் கன்றுகள் நடும் நிகழ்ச்சிகள் நடந்தது. வாசவி கிளப் இயக்குனர் ஸ்ரீராமரெட்டி, துணை ஆளுனர் நாராயண குப்தா, ரவீந்திரன், ரயில் நிலைய அதிகாரி அண்ணாமலை, மாவட்ட வன அலுவலர் மணி, ரயில்வே துறை தமிழ்வாணன், பேரூராட்சி சேர்மன் ராஜ்பாண்டியன், துணை சேர்மன் முருகேசன், ஆர்ய வைசிய சங்க நிர்வாக தலைவர் கோவிந்தசாமி, சப்-இன்ஸ்பெக்டர் அண் ணாமலை பங்கேற்றனர். நேற்று முன்தினம் காலை முதல் மாலை வரை நடந்த தொடர் நிகழ்ச் சிகளுக்கான ஏற்பாடுகளை வாசவி கிளப் கிளை தலைவர் கிருஷ்ணமூர்த்தி, செயலாளர் மனோ கரன் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.