சாம்பியன்ஸ் லீக்: நியூசவுத்வேல்ஸ் அணி வெற்றி
சாம்பியன்ஸ் லீக்: நியூசவுத்வேல்ஸ் அணி வெற்றி
சாம்பியன்ஸ் லீக்: நியூசவுத்வேல்ஸ் அணி வெற்றி
UPDATED : செப் 28, 2011 07:28 PM
ADDED : செப் 28, 2011 05:25 PM
சென்னை: சாம்பியன்ஸ் லீக் தொடரில் சென்னையில் நடக்கும் இன்றைய முதல் போட்டியில் டிரினிடாட் டுபாக்கோ அணியும், நியூ சவுத்வேல்ஸ் அணியும் மோதுகின்றன.
இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்யும் டிரினிடாட் டுபாக்கோ அணி 19 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 139 ரன்கள் எடுத்தது. இதன் பின்னர் களமிறங்கியுள்ள நியூசவுத்வேல்ஸ் அணியும் 20வது ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 139 ரன்கள் எடுக்கவே போட்டி டை ஆனது. இதனையடுத்து வெற்றியை தீர்மானிக்க சூப்பர் ஓவர் முறை பயன்படுத்தப்பட்டது. இதனையடுத்து களமிறங்கிய நியூசவுத்வேல்ஸ் அணி ஒரு ஓவரில் 19 ரன்கள் எடுத்தது. பின்னர் களமிறங்கிய டிரினிடாட் டுபாக்கோ அணி 15 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனையடுத்து நியூசவுதவேல்ஸ் அணி வெற்றி பெற்றது.