அரசியல் கட்சிகளுடன் தொடர்பா? ஹசாரே குழு மறுப்பு
அரசியல் கட்சிகளுடன் தொடர்பா? ஹசாரே குழு மறுப்பு
அரசியல் கட்சிகளுடன் தொடர்பா? ஹசாரே குழு மறுப்பு
UPDATED : ஆக 20, 2011 06:30 PM
ADDED : ஆக 20, 2011 06:21 PM
புதுடில்லி: அரசியல் கட்சிகளுடன் ஹசாரே குழுவிற்கு தொடர்பு உள்ளது என்பதை
அக்குழு மறுத்துள்ளது. மேலும் அக்குழுவினர் பேசுகையில்,மத்திய அரசு , லோக்பால்
மசோதா உருவாவதை தடுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. பல வருடங்களாக லோக்பால் மசோதா நிறைவேற்றவில்லை. அரசை சிறைப்படுத்தவில்லை. ஊழலுக்கு எதிரான போராட்டத்தை விட்டுத்தரமாட்டோம். நாட்டில் உள்ள ஒவ்வொருவருக்கும் போராட உரிமை உள்ளது. லோக்பால் மசேசதாவுக்காக நாட்டு மக்களை ஏங்க வைக்கக்கூடாது. எங்களுக்கு பா.ஜ., அல்லது ஆர் எஸ் எஸ்., சுடன் தொடர்பில்லை. அரசு எங்கள் இயக்கத்தை பா.ஜ.,
ஆர்.எஸ்.எஸ்., மற்றும் அமெரிக்காவுடன் தொடர்பு படுத்துகிறது. தவறான
குற்றச்சாட்டுக்களை சுமத்தி அரசு காலதாமதம் செய்யக்கூடாது. அரசு எங்களை
திசைதிருப்ப முயற்சி செய்கிறது. லோக்பால் மசோதா தொடர்பாக விளம்பரம் வெளியிட்டு, மக்களை தவறாக வழிநடத்துகிறது. அரசு வெளியிட்டுள்ள விளம்பரத்தில் இரண்டு மசோதாக்களையும் வெளியிட வேண்டும். திசைதிருப்புவது, பிரிப்பது போன்ற திட்டங்கள் எங்கள் போராட்டத்தை பாதிக்காது. எங்களிடம் எநு்த பிரிவினையும் கிடையாது.
ஜன் லோக்பால் மசோதா நிறைவேறுவதில்காலதாமதம் ஏற்படுவதை அனுமதிக்க
மாட்டோம். என கூறினர்.