Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/அடுத்த மாதம் வங்கதேசம் செல்கிறார் மன்மோகன் சிங்

அடுத்த மாதம் வங்கதேசம் செல்கிறார் மன்மோகன் சிங்

அடுத்த மாதம் வங்கதேசம் செல்கிறார் மன்மோகன் சிங்

அடுத்த மாதம் வங்கதேசம் செல்கிறார் மன்மோகன் சிங்

ADDED : ஆக 19, 2011 01:54 AM


Google News
Latest Tamil News

ஷில்லாங் : மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியும், மேகாலயா முதல்வர் முகுல் சங்மாவும், பிரதமர் மன்மோகன் சிங்குடன் வங்கதேசப் பயணம் மேற்கொள்ள உள்ளனர்.

பிரதமர் மன்மோகன் சிங், அடுத்த மாதம் வங்கதேசப் பயணம் மேற்கொள்கிறார். பிரதமரின் தாகா பயணத்தின் மூலம், இருநாட்டு உறவுகள் மேலும் பலப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது. வங்கதேசத்துக்கும், இந்தியாவுக்கும் இடையேயான எல்லைப் பிரச்னைகள் குறித்து, பிரதமரின் பயணத்தின் போது விவாதிக்கப்பட உள்ளது.

வங்கதேசத்தையொட்டி மேற்கு வங்க மாநிலமும், மேகாலயாவும் உள்ளன. எனவே, தன்னுடைய பயணத்தின் போது, இந்த மாநில முதல்வர்களான மம்தா பானர்ஜி மற்றும் முகுல் சங்மா, உடன் வருவது உதவியாக இருக்கும் என, பிரதமர் நம்பினார். இது தொடர்பாக, அவர்களுக்குக் கடிதமும் எழுதினார். இதையடுத்து, பிரதமரின் வங்கதேசப் பயணத்தின் போது, இரு மாநில முதல்வர்களும் உடன் செல்வது உறுதியாகியுள்ளது.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us