/உள்ளூர் செய்திகள்/மதுரை/பீஸ்' பாக்கிக்காக பியூசை பிடுங்கிய மின்வாரியம்பீஸ்' பாக்கிக்காக பியூசை பிடுங்கிய மின்வாரியம்
பீஸ்' பாக்கிக்காக பியூசை பிடுங்கிய மின்வாரியம்
பீஸ்' பாக்கிக்காக பியூசை பிடுங்கிய மின்வாரியம்
பீஸ்' பாக்கிக்காக பியூசை பிடுங்கிய மின்வாரியம்
ADDED : ஜூலை 27, 2011 04:53 AM
மதுரை : மாநகராட்சியின் மின்வாரிய 'பீஸ்' பாக்கிக்காக தெருவிளக்குகளின் 'பியூøŒ' பிடுங்கியதால் ரேஸ்கோர்ஸ் காலனியே இருளில் மூழ்கி கிடக்கிறது.மதுரை நத்தம் ரோட்டில் ரேஸ்கோர்ஸ் காலனி உள்ளது.
வீட்டுவசதி வாரியத்திற்கு சொந்தமான வீடுகளில் 650 அரசு ஊழியர்கள் குடும்பங்கள் இங்கு உள்ளன. இந்தக் காலனியில் கடந்த 10 நாட்களாக தெருவிளக்குகளே எரியவில்லை. வீடுகளில் மட்டும் விளக்குகள் எரிகின்றன. இதனால் இரவில் காலனி முழுவதும் இருள்சூழ்ந்து கிடக்கிறது. காம்பவுண்ட் இல்லாததால் யாரும் எளிதில் காலனிக்குள் சென்று வர முடியும். இதனால் சமூகவிரோதிகள் இங்கு கூடுகின்றனர். இரவு துவங்கிவிட்டாலே பெண்கள் தனியாக செல்ல அச்சப்படுகின்றனர். தெருவிளக்குகள் எரியாததற்கு காரணம் குறித்து விசாரித்ததில், மின்வாரியத்திற்கு மின்கட்டணம் செலுத்தாததால், பியூøŒ பிடுங்கிவிட்டனர் என்று தெரிவித்தனர். சமீபத்தில் மின்வாரியம் தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்திற்கு ஒரு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதில் 2006 மார்ச் முதல் 2011 மார்ச் வரை மின்வாரிய கட்டணமாக ரூ. 1.72 லட்சம் உடனே செலுத்த வேண்டும், எனக் கூறப்பட்டுள்ளது.
இதுபற்றி விசாரித்தபோது, 'ஒரு போதுமே வீட்டுவசதி வாரியம் மின்கட்டணம் செலுத்துவதில்லை. இதை மதுரை மாநகராட்சிதான் செலுத்தி வந்தது. கடந்த 2005 வரையான காலத்தில் செலுத்தியுள்ளனர். அதன் பின் செலுத்தவில்லை என்பதால் அதை வீட்டுவசதி வாரியத்திடம் கேட்டு நோட்டீஸ் அளித்துள்ளனர். ஆனால் தெருவிளக்குகளுக்கான பியூøŒ பிடுங்கும் முன் அவர்களுக்கு இதை தெரியப்படுத்தாமல், மின்சப்ளையை நிறுத்திவிட்டு நோட்டீஸ் வழங்கியுள்ளனர். கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசு ஊழியர்கள் விரும்புகின்றனர்.