/உள்ளூர் செய்திகள்/பெரம்பலூர்/ஆக.,13ல் காஸ் இணைப்பு நுகர்வோர் குறைதீர் கூட்டம்ஆக.,13ல் காஸ் இணைப்பு நுகர்வோர் குறைதீர் கூட்டம்
ஆக.,13ல் காஸ் இணைப்பு நுகர்வோர் குறைதீர் கூட்டம்
ஆக.,13ல் காஸ் இணைப்பு நுகர்வோர் குறைதீர் கூட்டம்
ஆக.,13ல் காஸ் இணைப்பு நுகர்வோர் குறைதீர் கூட்டம்
ADDED : ஆக 08, 2011 02:37 AM
பெரம்பலூர்: 'பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள காஸ் இணைப்பு பெற்றுள்ள நுகர்வோர்களின் குறைகளை தீர்க்கும் வகையில் காஸ் இணைப்பு நுகர்வோர் குறைதீர் கூட்டம் வரும் 13ம் தேதி நடக்கிறது' என மாவட்ட கலெக்டர் தரேஷ்அஹமது தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்ட அறிக்கை: பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள காஸ் இணைப்பு பெற்றுள்ள நுகர்வோர்களுக்கு காஸ் சிலிண்டர் நிரப்பிட பதிவு செய்வதில் மெத்தனப்போக்கு அல்லது முறைகேடுகள், காஸ் சிலிண்டர் வழங்குவதில் காலதாமதம் போன்ற குறைபாடுகள் குறித்து வரப்பெறும் புகார்களை பெற்று உரிய நடவடிக்கைகள் எடுத்து எண்ணெய் நிறுவனங்களின் விதிமுறைகளுக்கு உட்பட்டு காஸ் சிலிண்டர் விநியோகத்தை சீர்படுத்த குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடத்த தமிழக உணவுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். அதன்படி, பெரம்பலூர் மாவட்டத்தில் இக்குறைதீர்க்கும் நாள் கூட்டம் வரும் 13ம் தேதி காலை 11 மணிக்கு பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்ட அரங்கில் டி.ஆர்.ஓ., தலைமையில் நடக்கிறது. எனவே, இது குறித்து குறைகள் தெரிவிக்க விரும்பும் காஸ் இணைப்பு பெற்றுள்ள நுகர்வோர்கள் தங்கள் குறைகளை மனுக்கள் மூலம் இக்கூட்டத்தில் தெரிவிக்கலாம்.


