ADDED : செப் 24, 2011 06:49 PM
சென்னை: உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு அக்., 17, 19 மற்றும் ஓட்டு எண்ணிக்கை நடக்கும் அக்., 21 ஆகிய மூன்று நாள், 'டாஸ்மாக்' கடைகள் மூடப்படும் என, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தமிழக உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதையடுத்து தேர்தல் நன்னடத்தை விதிகள் அமல் படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், உள்ளாட்சி தேர்தல் ஓட்டுப்பதிவு எண்ணிக்கையின் போது, அசம்பாவிதங்களை தவிர்க்கும் வகையில், 'டாஸ்மாக்' கடைகள் மூடுவது குறித்து, அதிகாரிகள் மட்டத்தில் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. தமிழகம் முழுவதும் உள்ள, 'டாஸ்மாக்' கடைகளுக்கு, அக்., 17, 19, 21 ஆகிய மூன்று நாள் விடுமுறை அளிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. திருட்டு விற்பனையை தடுக்கும் வகையில், தீவிர ரோந்து பணியில் ஈடுபட அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.


