ADDED : செப் 21, 2011 10:55 PM
திண்டுக்கல் : திண்டுக்கல்லில் கள்ளநோட்டு புழக்கத்தில் விட்ட இருவர் கைது செய்யப்பட்டனர்.
இவர்களிடம் 8,500 ரூபாய் நோட்டு பறிமுதல் செய்யப்பட்டது. திண்டுக்கல் காந்தி மார்க்கெட், டாஸ்மாக் கடைகளில் கள்ள நோட்டுக்கள் வருவதாக புகார் எழுந்தது. நாகல்நகர் கனரா வங்கியிலும் கள்ளநோட்டுகள் வந்தன. இது குறித்து வங்கி மேலாளர் புகார் அளித்தார். இதையடுத்து, தனிப்படை போலீசார், கள்ளநோட்டு கும்பலை தேடி வந்தனர். திண்டுக்கல் லாட்ஜில், இரண்டு பேர் தங்கி, கள்ளநோட்டு புழக்கத்தில் விடுவதாக தகவல் கிடைத்தது.நேற்று மாலை 6 மணிக்கு, சோதனை நடத்தினர். கோபால்பட்டியை சேர்ந்த பழனிச்சாமி, 53, திண்டுக்கல் ஸ்கீம் ரோடு தட்சிணாமூர்த்தியை, பிடித்தனர். இவர்களிடமிருந்து 500, 1000 ரூபாய் கள்ளநோட்டுக்கள் பறிமுதல் செய்யப்பட்டன.