/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ஐ.எஸ்.ஐ., தரச்சான்று இல்லாத மின் பொருட்கள் விற்ற 2 பேர் மீது வழக்குஐ.எஸ்.ஐ., தரச்சான்று இல்லாத மின் பொருட்கள் விற்ற 2 பேர் மீது வழக்கு
ஐ.எஸ்.ஐ., தரச்சான்று இல்லாத மின் பொருட்கள் விற்ற 2 பேர் மீது வழக்கு
ஐ.எஸ்.ஐ., தரச்சான்று இல்லாத மின் பொருட்கள் விற்ற 2 பேர் மீது வழக்கு
ஐ.எஸ்.ஐ., தரச்சான்று இல்லாத மின் பொருட்கள் விற்ற 2 பேர் மீது வழக்கு
ADDED : ஆக 11, 2011 02:36 AM
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில், ஐ.எஸ்.ஐ., தரச்சான்று பெறாத மின்சாதன பொருட்களை விற்பனை செய்த, இரு கடை உரிமையாளர்கள் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இந்திய அரசு மின்சாதன பொருட்கள் தரக்கட்டுப்பாடு ஆணை 2003-ன்படி நீரில் மூழ்கி சூடேற்றும் கருவி, மின் சலவைபெட்டி, மின் அடுப்பு, பிவிசி ஒயர்கள், மின் விசைமாற்றி, சர்க்யூட் பிரேக்கர்ஸ், சி.எப்.எல்., விளக்குகள் உள்ளிட்ட 17 வகையான வீட்டு உபயோக மின் சாதனப் பொருட்கள் கண்டிப்பாக ஐ.எஸ்.ஐ., தரச்சான்று பெற்றிருக்க வேண்டும். இவ்வாறு தரச்சான்று பெறாமல் உற்பத்தி செய்தல், இருப்பு வைத்திருந்தால் அல்லது விற்பனை செய்தால் தரக்கட்டுப்பாடு சட்டப்படி தண்டிக்க வேண்டிய குற்றமாகும். இது போன்ற குற்றம் விளைவிப்பவர்களுக்கு நீதிமன்றத்தில் 50,000 ரூபாய் வரை அபராதம் அல்லது ஓராண்டு சிறை தண்டனை அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்படும். கிருஷ்ணகிரி பெங்களூரு சாலை மற்றும் சென்னை சாலைகளில் உள்ள மின் சாதன பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளில் மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் ஏகாம்பரம், திட்ட மேலாளர் அரசு, உதவி பொறியாளர் பிரச்சன்னா ஆகியோர் கொண்ட குழுவினர் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது இரு கடைகளில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த ஐ.எஸ்.ஐ., தரச்சான்று பெறாத 6,000 ரூபாய் மதிப்புள்ள மின் சாதன பொருட்களை கைப்பற்றினர். கடை உரிமையாளர்கள் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. ''தரமற்ற வீட்டு உபயோக மின் சாதன பொருட்கள் உற்பத்தி செய்யவதும், இருப்பு வைக்கவும், விற்பனை செய்யவும் வேண்டாமென மின்பொருள் விற்பனை நிறுவனங்களை மாவட்ட தொழில் மைய மேலாளர் கேட்டு கொண்டுள்ளார். மேலும், விலை குறைவு காரணத்தால் ஐ.எஸ்.ஐ., தரச்சான்று பெறாத வீட்டு உபயோக மின்சாதனை பொருட்களை வாங்கி உபயோகப்படுத்துவதால் மின் நுகர்வு அதிகமாவதுடன் மின் விபத்து நேரிட வழிவகுக்கும். எனவே, அத்தகைய மின் பொருட்களை வாங்க வேண்டாம்,'' என பொது மேலாளர் ஏகாம்பரம் எச்சரித்துள்ளார்.