/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/என்.எஸ்.எஸ்.,செயல்பாடு லட்சுமிநாராயணன் பெருமிதம்என்.எஸ்.எஸ்.,செயல்பாடு லட்சுமிநாராயணன் பெருமிதம்
என்.எஸ்.எஸ்.,செயல்பாடு லட்சுமிநாராயணன் பெருமிதம்
என்.எஸ்.எஸ்.,செயல்பாடு லட்சுமிநாராயணன் பெருமிதம்
என்.எஸ்.எஸ்.,செயல்பாடு லட்சுமிநாராயணன் பெருமிதம்
புதுச்சேரி : 'புகழ் பெறுவதற்கும் தேர்தலில் ஓட்டுகளைப் பெறவும் சமூக சேவை செய்கின்றனர்' என, லட்சுமிநாராயணன் எம்.எல்.ஏ., பேசினார்.முத்தியால்பேட்டை கணேஷ் நகரில், பாரதிதாசன் மகளிர் கல்லூரியின் நான்கு நாள் என்.எஸ்.எஸ்., முகாமைத் துவக்கி வைத்து, அவர் பேசியதாவது:இந்தியாவில் உயர் கல்வி பெறுவோரின் எண்ணிக்கை மிகக்குறைவாகவே உள்ளது.100ல் 15 பேர்கூட உயர் கல்விக்கு செல்வதில்லை.
சேவை மனப்பான்மை உருவாவதற்கும் பெருகுவதற்கும் என்.எஸ்.எஸ்., தூண்டுதலாக உள்ளது.இன்றைய சூழ்நிலையில், சமூக சேவை என்பது வேறு திசையில் போய்க்கொண்டுள்ளது. தனிப்பட்ட ஒருவர் புகழ் பெறுவதற்கும், தேர்தலில் ஓட்டுகளைப் பெறவும், சமூக சேவை செய்கின்றனர். எந்தவித பிரதிபலனும் எதிர்பாராமல் உதவி செய்வதுதான் சமூக சேவை. சமுதாய அக்கறையை அனைவரிடத்திலும் ஏற்படுத்த என்.எஸ்.எஸ்.சின் செயல்பாடு உதவுகிறது. இவ்வாறு லட்சுமிநாராயணன் பேசினார்.