/தினம் தினம்/இதப்படிங்க முதல்ல/விருதுநகரில் பூங்காவில் வீசப்பட்ட நோயாளி?விருதுநகரில் பூங்காவில் வீசப்பட்ட நோயாளி?
விருதுநகரில் பூங்காவில் வீசப்பட்ட நோயாளி?
விருதுநகரில் பூங்காவில் வீசப்பட்ட நோயாளி?
விருதுநகரில் பூங்காவில் வீசப்பட்ட நோயாளி?
UPDATED : ஆக 17, 2011 01:33 AM
ADDED : ஆக 17, 2011 12:01 AM

விருதுநகர்:''விருதுநகர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட தன்னை, ஆஸ்பத்திரி பணியாளர்கள் பூங்காவில் வீசிவிட்டனர்,'' என்று நோயாளி கூறினார்.
விருதுநகர் லட்சுமி நகரை சேர்ந்தவர் சந்திரகாந்தன், 33. சி.ஏ., படிக்கிறார். தாய், தந்தையர் இறந்து விட்டனர். தாத்தாவின் வீட்டில் தங்கியிருந்தார். கடந்த மாதம் தாத்தா இறந்து விட்டார். நோயால் பாதிக்கப்பட்ட நிலையில் விருதுநகர் அரசு ஆஸ்பத்திரியில் தெரிந்தவர்கள் மூலம் சேர்க்கப்பட்டார். அவர் நோயால் அவதிப்பட்டு எழுந்திருக்க முடியாத நிலையில் இருந்தார். இந்நிலையில் அவர் சில நாட்களாக கல்லூரி ரோட்டில் உள்ள நகராட்சி பூங்காவில் உணவு உண்ணாமல் நிர்வாணமாக கிடந்தார்.
சந்திரகாந்தன் கூறுகையில், ''விருதுநகர் அரசு ஆஸ்பத்திரியில் ஒரு மாதத்திற்கு முன்னர் சேர்க்கப்பட்டேன். என்னால் நடக்க முடியவில்லை. ஒரு வாரத்திற்கு முன் நகராட்சி பூங்காவில் ஆஸ்பத்திரி ஊழியர்கள் வீசி விட்டு சென்றுவிட்டனர்,'' என்றார். அரசு ஆஸ்பத்திரி இணை இயக்குனர் அஜிக் கண்ணம்மாள் கூறுகையில், '' நோயாளியுடன் யாரும் இல்லாத நிலையில் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். உறவினரை பார்க்க செல்வதாக சென்றவர் திரும்ப வரவில்லை,'' என்றார். நோயாளி சந்திரகாந்தனை அரசு ஆஸ்பத்திரி நிர்வாகம் 108 ஆம்புலன்ஸ் மூலம் மீண்டும் ஆஸ்பத்திரியில் சேர்த்துள்ளது.