சுதந்திர தின பாதுகாப்பு 364 பேர் கைது
சுதந்திர தின பாதுகாப்பு 364 பேர் கைது
சுதந்திர தின பாதுகாப்பு 364 பேர் கைது
ADDED : ஆக 08, 2011 02:15 AM
சென்னை:சுதந்திர தின விழா பாதுகாப்பு நடவடிக்கைகளையொட்டி, சென்னை நகரில்
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, 364 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை நகரில், சுதந்திர தின விழாவை முன்னிட்டு, பாதுகாப்பு ஏற்பாடுகள்
தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. நேற்று முன்தினம், சென்னை மாநகர் முழுவதும்,
போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டனர். இதில், 364 பேர், முன்னெச்சரிக்கை
நடவடிக்கையாக, கைது செய்யப்பட்டனர். கொலை, கொள்ளை உள்ளிட்ட வழக்குகளில்
தொடர்புடையவர்கள், ரவுடிகள் மற்றும் பழைய குற்றவாளிகள் உட்பட, பலர் இதில்
அடங்குவர். மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டிய, 75 பேரும் சிக்கினர்.


