ADDED : செப் 21, 2011 11:57 AM

பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே ஊரணிகள், கிராமங்களின் நிலத்தடி நீர் ஆதாரமாகவும், குடிநீர் ஆதாரமாகவும் விளங்கி உள்ளன.
ஊரணி இல்லாத ஊரே இல்லை என்ற நிலை படிப்படியாக மாறி, ஊரணி இல்லாத ஊர்களே இன்று அதிகம் உள்ளன. ஊரின் அருகிலோ, அல்லது மையப்பகுதியிலோ இவை அமைக்கப்பட்டு இருந்தன. காலப்போக்கில் இவற்றை மூடி பிளாட்டுகளாக்கிவிட்டனர். பல இடங்களில், ஊரணிகளை மணல் போட்டு மூடி விளையாட்டு மைதானமாகவோ அல்லது வேறு பயன்பாட்டிற்கோ பயன்படுத்தி வருகின்றனர். ஒரு சில ஊர்களில் இருக்கும் ஊரணிகளும், பராமரிப்பு இல்லாமலும், சாக்கடை நீர் கலக்கும் குட்டையாகவும் உள்ளன. ஊரில் உள்ள மொத்த கழிவு நீரும் அங்குதான் கலக்கின்றன. இதனால், ஒரு காலத்தில் குடிநீருக்கு பயன்படுத்தப்பட்ட ஊரணி நீரில் இன்று குளிக்க கூட முடியாத நிலைதான் உள்ளது. பல ஊர்களில், நோய்பரப்பும் மையமாக விளங்குகின்றன. அரசு இவற்றை பராமரிக்க பல கோடி ரூபாய் நிதி ஒதுக்கியும் பலனற்ற நிலையே உள்ளது. தேனி மாவட்டத்தில் சேதமான இவற்றை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.