பிரதமருக்கு கடிதம்: பார்லிமென்ட் கூட்டுக்குழு முடிவு
பிரதமருக்கு கடிதம்: பார்லிமென்ட் கூட்டுக்குழு முடிவு
பிரதமருக்கு கடிதம்: பார்லிமென்ட் கூட்டுக்குழு முடிவு
ADDED : செப் 27, 2011 05:44 PM
புதுடில்லி: 2ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடு தொடர்பாக அமைக்கப்பட்ட பார்லிமென்ட் கூட்டுக்குழு இன்று ஆலோசனை நடத்தியது.
இந்த முடிவில் 2ஜி ஸ்பெக்ட்ரம் தொடர்பாக அனைத்து ஆவணங்களும் குழு முன்பு சமர்ப்பிக்கப்பட வேண்டும் என கூறியுள்ளது. 2ஜி தொடர்பான நிதியமைச்சகத்தின் ஆவணங்கள் இதுவரை சமர்ப்பிக்கப்படவில்லை. இது தொடர்பாக பிரதமர் அலுவலகம் மற்றும் அனைத்து அமைச்சகங்களுக்கும் கடிதம் எழுத பார்லிமென்ட் கூட்டுக்குழு முடிவு செய்துள்ளது. இதனிடையே நாளை நடைபெற இருந்த 2ஜி ஸ்பெக்ட்ரம் தொடர்பாக நாளை நடைபெற இருந்த பார்லிமென்ட் கூட்டுக்குழு கூட்டம் ரத்து செய்யப்பட்டது. இதனிடையே 2ஜி தொடர்பான ஆவணங்கள் ஏன் சமர்ப்பிக்கவில்லை என எதிர்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் 2ஜி தொடர்பாக காங்கிரஸ் கட்சிக்கு பா.ஜ., கண்டனம் தெரிவித்துள்ளது. இந்த விவகாரம் காங்கிரஸ் கட்சியின் உள்விவகாரம் அல்ல என கூறியுள்ளது.