Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/பெட்ரோல் விலை குறைவு எப்போது? : ஐ.ஓ.சி., சல்சாப்பு

பெட்ரோல் விலை குறைவு எப்போது? : ஐ.ஓ.சி., சல்சாப்பு

பெட்ரோல் விலை குறைவு எப்போது? : ஐ.ஓ.சி., சல்சாப்பு

பெட்ரோல் விலை குறைவு எப்போது? : ஐ.ஓ.சி., சல்சாப்பு

ADDED : ஆக 11, 2011 12:53 AM


Google News

புதுடில்லி : சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை கணிசமாக குறைந்து, நீடித்து இருக்கும்பட்சத்தில், பெட்ரோல் விலையை குறைப்பது பற்றி முடிவு செய்யப்படும்' என, இந்தியன் ஆயில் கழகம் அறிவித்துள்ளது.

சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை வெகுவாக குறைந்து வருகிறது. இதனால், இந்தியாவில் பெட்ரோல் விலையை குறைக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.



இது குறித்து, இந்தியன் ஆயில் கழக சேர்மன் புடோலா நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை ஒரு நாள் குறைவதை வைத்து, முடிவு செய்ய முடியாது. கடந்த வெள்ளிக்கிழமை வெகுவாக குறைந்தது. ஒரு பேரலுக்கு 300 ரூபாய் வரை குறைந்தது. இந்த குறைவு நிலைத்து நிற்கவில்லை. தள்ளாட்டம் நிலவுகிறது. இன்று பேரலுக்கு 200 ரூபாய் வரை உயர்ந்துள்ளது. தற்போதைய நிலையில், டில்லியை பொறுத்தமட்டில் 30 காசுகள் தான் பெட்ரோல் விலை அதிகம் உள்ளது. நாங்கள் விலை நிலவரத்தை உன்னிப்பாக கண்காணித்து வருகிறோம். கணிசமாக குறைந்து நீடித்து இருக்கும்பட்சத்தில், கண்டிப்பாக பெட்ரோலின் சில்லறை விற்பனை விலையை குறைப்போம். இவ்வாறு புடோலா கூறினார்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us