நடப்பு கல்வியாண்டிற்கான தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்கள் பொது மாறுதலுக்கான கலந்தாய்வு
நடப்பு கல்வியாண்டிற்கான தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்கள் பொது மாறுதலுக்கான கலந்தாய்வு
நடப்பு கல்வியாண்டிற்கான தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்கள் பொது மாறுதலுக்கான கலந்தாய்வு
ADDED : செப் 17, 2011 12:50 AM
சென்னை: நடப்பு கல்வியாண்டிற்கான, தலைமையாசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் பொது மாறுதலுக்கான கலந்தாய்வுக் கூட்டம், வரும் 19ம் தேதி முதல் நடைபெற உள்ளது.
2011-2012ம் கல்வியாண்டில், பள்ளிக் கல்வித் துறையின் கீழ் செயல்படும் அரசு நகராட்சி உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் தலைமையாசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு, வரும் 19 தேதி முதல் 20 வரை நடைபெற உள்ளது. இந்த பொது மாறுதலில் கலந்துகொள்ளும் ஆசிரியர்கள், தற்போது பணிபுரியும் பள்ளியில், ஓராண்டு முடித்திருக்க வேண்டும். இதில், விண்ணப்பிக்காத ஆசிரியர்கள், கலந்தாய்வு நாளன்று தலைமையாசிரியர் மற்றும் முதன்மைக் கல்வி அலுவலர் பரிந்துரை உள்ள விண்ணப்பத்துடன், கலந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்படுகிறது. இந்த பொது மாறுதலுக்கான கலந்தாய்வு, சென்னை உட்பட அனைத்து மாவட்டங்களிலும் நடைபெறுகிறது. மேலும், இது குறித்து தகவல் அறிய, பள்ளிகல்வித் துறை இணையதளத்தை தொடர்பு கொள்ளவும்.