வயநாட்டில் பாலம் கட்டும் பணியில் பெண் அதிகாரி சீதா
வயநாட்டில் பாலம் கட்டும் பணியில் பெண் அதிகாரி சீதா
வயநாட்டில் பாலம் கட்டும் பணியில் பெண் அதிகாரி சீதா
ADDED : ஆக 03, 2024 06:03 AM

வயநாடு: வயநாட்டில், சூரல்மலை - முண்டக்கை பகுதிகளை இணைக்கும் வகையில் இருந்த பாலம் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. இதனால், கிராமங்கள் துண்டிக்கப்பட்டன; மீட்புப் பணிகளிலும் தொய்வு ஏற்பட்டது.
இந்நிலையில், இரு கிராமங்களை இணைக்கும் வகையிலும், மீட்புப் பணிகளை துரிதப்படுத்தவும், நம் ராணுவத்தினர் பெய்லி பாலத்தை அமைத்தனர். 190 அடி உடைய இந்த பாலத்தை, இடைவேளையின்றி, 31 மணி நேரத்தில் ராணுவத்தினர் கட்டி முடித்தனர். 3 மீட்டர் அகலமுடைய இந்த பாலத்தில், 24 டன் எடையை ஏற்றிச் செல்லலாம்.
கர்நாடகாவின் பெங்களூரில் உள்ள மெட்ராஸ் இன்ஜினியர் குரூப் பிரிவைச் சேர்ந்த, 144 பேர் அடங்கிய குழுவினர், பெய்லி பாலத்தை கட்டினர். இக்குழுவில், சீதா அசோக் ஷெல்கே என்ற பெண் அதிகாரி, பாலம் கட்டும் பணியை முன்னின்று நடத்தினார். இது தவிர, நேற்று முன்தினம் அதிகாலை 3:00 மணியளவில், பெய்லி பாலத்திற்கு இணையாக, மற்றொரு 100 அடி நடைபாலத்தை, மூன்று மணி நேரத்தில் ராணுவத்தினர் கட்டி முடித்தனர்.