/உள்ளூர் செய்திகள்/திருநெல்வேலி/தென்காசியில் இன்று முதல் 3 நாட்களுக்கு குடிநீர் வினியோகம் "கட்'தென்காசியில் இன்று முதல் 3 நாட்களுக்கு குடிநீர் வினியோகம் "கட்'
தென்காசியில் இன்று முதல் 3 நாட்களுக்கு குடிநீர் வினியோகம் "கட்'
தென்காசியில் இன்று முதல் 3 நாட்களுக்கு குடிநீர் வினியோகம் "கட்'
தென்காசியில் இன்று முதல் 3 நாட்களுக்கு குடிநீர் வினியோகம் "கட்'
ADDED : செப் 09, 2011 01:39 AM
தென்காசி : 'தென்காசி நகராட்சி பகுதியில் உள்ள சில பகுதிகளுக்கு இன்று (9ம்
தேதி) முதல் 3 நாட்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படாது' என நகராட்சி
கமிஷனர் செழியன் கூறியுள்ளார்.
இதுபற்றி அவர் விடுத்துள்ள அறிக்கையில்
கூறியிருப்பதாவது: ''தென்காசி நகராட்சிக்குட்பட்ட மதுரை சாலையில் ரயில்வே
மேம்பாலம் அமைக்கும் பணி நடப்பதை முனிட்டு குடிநீர் பிரதான குழாயினை மாற்றி
அமைக்கும் பணி நடக்கிறது. இதனால் இந்நகராட்சி பகுதிகளான ஹவுசிங் போர்டு
காலனி, கூளக்கடை பஜார், எல்.ஆர்.எஸ்.பாளையம், தைக்காதெரு, மங்கம்மா சாலை,
உடையார் தெரு உள்ளிட்ட பகுதிகளில் இன்று (9ம் தேதி) குடிநீர் வினியோகம்
செய்ய இயலாது. மேலும் தொடர்ந்து வரும் 11 தேதி வரை 3 நாட்கள் குடிநீர்
வினியோகம் செய்ய இயலாத நிலை ஏற்பட்டுள்ளது'' என நகராட்சி கமிஷனர் செழியன்
அறிக்கையில் கூறியுள்ளார்.


