அணைகள், மதகுகளை சீரமைக்க 31 கோடி ரூபாய் ஒதுக்கீடு
அணைகள், மதகுகளை சீரமைக்க 31 கோடி ரூபாய் ஒதுக்கீடு
அணைகள், மதகுகளை சீரமைக்க 31 கோடி ரூபாய் ஒதுக்கீடு
சென்னை : மதகுகள் மற்றும் பல்வேறு சிறு அணைகளை சீரமைக்க, 31 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து, முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
இத்திட்டத்தில், 210 மதகுகளை மறு கட்டமைப்பு செய்தல், 54 மதகுகளை சீர்படுத்துதல், 15 சிற்றணைகளை மறு கட்டமைப்பு செய்தல், 14 சிற்றணைகளை சீர்படுத்துதல், 219.872 கிலோ மீட்டர் நீளத்திற்கு கரைகளை பலப்படுத்துதல், 121.715 கிலோ மீட்டர் நீளத்திற்கு கால்வாய்களை தூர் வாருதல், 12 ஆயிரத்து, 144 மீட்டர் நீளத்திற்கு பாசனக் கால்வாய் உள்கட்டமைப்பு பணிகளை மேற்கொள்ளுதல் ஆகிய பணிகள் மேற்கொள்ளப்படும்.
இதனால், சிவகங்கை மாவட்டத்தில், மானாமதுரை தாலுகா, விருதுநகர் மாவட்டத்தில், திருச்சுழி தாலுகா, ராமநாதபுரம் மாவட்டத்தில், பரமக்குடி, கமுதி, முதுகுளத்தூர், கடலாடி ஆகிய தாலுகாக்களில் உள்ள, 18 முறைசார்ந்த ஏரிகளின் கீழ் உள்ள, 4,755 எக்டேர் நிலங்கள் மற்றும் அதன், 71 முறைசாரா ஏரிகளின் கீழ் உள்ள, 6,128 எக்டேர் நிலங்களின் பாசன வசதி மேம்பாடு அடையும். இவ்வாறு செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.