/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/தகர்ந்து போன தளிர்களின் மூலிகை கனவு :மக்கள் ஒத்துழைப்பு இல்லாததால் பாழான பசுமை பள்ளிதகர்ந்து போன தளிர்களின் மூலிகை கனவு :மக்கள் ஒத்துழைப்பு இல்லாததால் பாழான பசுமை பள்ளி
தகர்ந்து போன தளிர்களின் மூலிகை கனவு :மக்கள் ஒத்துழைப்பு இல்லாததால் பாழான பசுமை பள்ளி
தகர்ந்து போன தளிர்களின் மூலிகை கனவு :மக்கள் ஒத்துழைப்பு இல்லாததால் பாழான பசுமை பள்ளி
தகர்ந்து போன தளிர்களின் மூலிகை கனவு :மக்கள் ஒத்துழைப்பு இல்லாததால் பாழான பசுமை பள்ளி
ADDED : ஆக 11, 2011 02:24 AM
தர்மபுரி : தர்மபுரி அருகே கடந்த சில ஆண்டுகள் வரை பசுமை மரங்கள், மூலிகை மாடம் அமைத்து பள்ளி குழந்தைகள் பராமரித்து வந்த பசுமை பள்ளி மக்கள் ஒத்துழைப்பு இல்லாமல் பாழ்பட்டு வருகிறது.
தளிர்களின் மனதில் மூலிகை எண்ணத்துக்கு தூவப்பட்ட விதைகள் துளிர் விடாமல் சருகாகி போனது. தர்மபுரியை அடுத்த கிருஷ்ணாபுரம் அரசு துவக்கப்பள்ளிக்கு கடந்த ஐந்தாண்டுக்கு முன் சென்றோர் பெரும் ஆச்சரியமாக பள்ளி வளாகத்தை பார்த்து சுற்றி வருவர். இது பள்ளியா அல்லது மூலிகை தோட்டமா? என வியக்க வைக்கும் அளவுக்கு பள்ளி வளாகம் முழுவதும் மூலிகை செடிகள் வளர்க்கப்பட்டு, நிழல் தரும் மரங்களும் வளாகத்தை பசுமையாகியிருந்தது. கடந்த 1997ம் ஆண்டு வரையில் இப்பள்ளி தலைமையாசிரியராக இருந்த கோவிந்தசாமி பள்ளி வளாகத்தில் மரங்களை வளர்த்ததோடு, பழங்காலத்தில் சித்தர்கள் மலைகளில் அபூர்வமாக கண்டறிந்த மூலிகை செடிகளை கொண்டு வந்து பள்ளி வளாகத்தில் மாடம் அமைத்து வளர்த்து வந்தார். எந்த பகுதியிலும் கிடைக்காத மூலிகை செடிகள் இந்த பள்ளியில் பயிலும் சின்னஞ்சிறு மாணவர்கள் மூலம் வளர்க்கப்பட்டது. சுற்றுச்சூழல் மாசுவை போக்கிட பள்ளி வளாகம் முழுவதும் மரக்கன்றுகள் நடப்பட்டது. ஒவ்வொரு மாணவரும் பள்ளி நேரத்தில் சில நிமிடங்கள் செடிகளுக்கு தண்ணீர் ஊற்றி பராமரிக்கும் பொறுப்பும், மூலிகை செடிகள் குறித்தும், அதன் மருத்துவ பயன் குறித்தும் மாணவர்களுக்கு மூலிகை குறித்த அறிவும் கிடைத்தது. கடந்த 1997ம் ஆண்டு கிருஷ்ணாபுரத்தை சேர்ந்த பொதுமக்கள் பங்களிப்போடு, பள்ளி வளாகத்தில் 60 மூலிகை மாடம் அமைக்கப்பட்டு பாராமரிக்கப்பட்டன. 1997ம் ஆண்டு தலைமையாசிரியர் கோவிந்தசாமி பணி ஓய்வு பெற்ற பின் புதிய தலைமையாசிரியர் கவுரம்மாள் மூலிகை செடிகளை பராமரிக்கும் பொறுப்பு வழங்கிய கோவிந்தசாமி, பொதுமக்களிடம் தலைமையாசிரியருக்கு முழு ஒத்துழைப்பு வழங்கி பள்ளியின் பசுமையை மாறாமல் இருக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்து சென்றார். தலைமையாசிரியர் கோவிந்தசாமி பணி ஓய்வுக்கு பின் மூலிகை செடிகளை பராமரிப்பதில் பெரும் சவால்களை சந்தித்தார் புதிய தலைமையாசிரியர் கவுரம்மாள். பெண் என்பதால், அவருக்கு கிராம மக்களின் ஒத்துழைப்பு கிடைக்கவில்லை. பள்ளி விடுமுறை நாட்களில் பள்ளி வளாகத்தில் நுழையும் அப்பகுதி வாலிபர்கள் மூலிகை செடிகளை பிடிங்கி சென்றதோடு, பள்ளி வளாகத்தில் இருந்த இரு தேக்க மரங்களையும் வெட்டி எடுத்து சென்றனர். மூலிகை மாடத்தில் இருந்த செடிகளை பிடிங்கி சென்றதால், தற்போது, ஒரு சில மூலிகை செடிகள் மட்டும் மாடத்தில் உள்ளது. 60 மாடங்களில் தற்போது பூச்செடிகள், சிறு மலர் வகை செடிகள் மட்டுமே வளர்க்கப்பட்டு வருகிறது. செடிகளுக்கு நீர் நிர்வாகம் செய்ய வசதியாக பள்ளி வளாகத்தில் அமைக்கப்பட்ட அடிபம்பும் பழுதாகி பல மாதங்கள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. செடிகளுக்கும், மரங்களுக்கும் தண்ணீர் பாய்ச்ச அமைக்கப்பட்ட போர் மோட்டார் ஒயர்கள், தண்ணீர் செல்லும் பைப் லைன்களை சிலர் திருடி சென்ற சம்பவமும் தலைமையாசிரியர் முதல் மாணவர்கள் வரையில் நிலை குலைய செய்ததோடு, மூலிகை கனவு ஆசை தகர்த்தப்பட்டு விட்டது. ஒரு நேரத்தில் பசுமையும், மூலிகை வளமும் செழிப்புடன் இருந்த பள்ளி தற்போது, பொதுமக்கள் ஒத்துழைப்பு இல்லாமல் வெறும் செடி, கொடிகள் மட்டும் வளரும் மாடமாக மாறி வருகிறது. 'கல்வி துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து கிராம மக்களை ஒருங்கிணைத்து பள்ளியில் மீண்டும் மூலிகை செடிகளை வளர்க்கவும், கிராம மக்கள் அடங்கிய கண்காணிப்பு குழு அமைத்து பள்ளியை பாதுகாக்கவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்' என ஆசிரியர்களும், மாணவர்களின் பெற்றோர்களும் எதிர்பார்க்கின்றனர்.