/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/குடியிருப்பைச் சுற்றி மழைநீர் ஆத்திரமடைந்த மக்கள் ஆர்ப்பாட்டம்குடியிருப்பைச் சுற்றி மழைநீர் ஆத்திரமடைந்த மக்கள் ஆர்ப்பாட்டம்
குடியிருப்பைச் சுற்றி மழைநீர் ஆத்திரமடைந்த மக்கள் ஆர்ப்பாட்டம்
குடியிருப்பைச் சுற்றி மழைநீர் ஆத்திரமடைந்த மக்கள் ஆர்ப்பாட்டம்
குடியிருப்பைச் சுற்றி மழைநீர் ஆத்திரமடைந்த மக்கள் ஆர்ப்பாட்டம்
ADDED : செப் 17, 2011 10:40 PM
ஸ்ரீபெரும்புதூர் : ஸ்ரீபெரும்புதூரில், மழை நீர் வெளியேற வழியில்லாததால், ஆத்திரமடைந்த மக்கள், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சி ஏழாவது வார்டில், சுபத்ராநகர், ராஜிவ்காந்தி நகர் ஆகியவை அமைந்துள்ளன.
இங்கு, 200க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். பெரும்பாலானோர், தனியார் தொழிற்சாலையில் பணிபுரிகின்றனர். பேரூராட்சி சார்பில், சில தெருக்களில் தார்ச் சாலை போடப்பட்டுள்ளது.
பெரும்பாலானத் தெருக்களில், மண் சாலை உள்ளது. கழிவுநீர் கால்வாய் வசதி இல்லை. வீடுகளிலிருந்து வெளியேறும் கழிவுநீர், காலி இடங்களில் தேங்கி நிற்கிறது. மழை நீர் கால்வாயும், நெடுஞ்சாலை விஸ்தரிப்பின்போது மூடப்பட்டது.இதனால், மழை நீர் வெளியேற முடியவில்லை. கடந்த இரண்டு நாட்களாக பெய்த மழையில், மழை நீர் வெளியேற வழியின்றி, வீடுகளைச் சுற்றி தேங்கியுள்ளது. பாதிக்கப்பட்ட அப்பகுதி மக்கள், மழை நீர் வெளியேற நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, நேற்று காலை 9.30 மணிக்கு, சிங்கப்பெருமாள் கோவில் சாலையில் திரண்டு, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து, ஸ்ரீபெரும்புதூர் போலீஸ் டி.எஸ்.பி., கஜேந்திரகுமார் தலைமையில், போலீசார், தாசில்தார் லட்சுமி, பேரூராட்சி தலைவர் செல்வமேரிஅருள்ராஜ் ஆகியோர் வந்தனர்.மழைநீர் கால்வாய் அமைக்க, நெடுஞ்சாலைத்துறையிடம் பேசி நிரந்தரத் தீர்வு காண்பதாக உறுதியளித்தனர். அதையேற்று, மக்கள் கலைந்து சென்றனர். பின், ஜே.சி.பி.,இயந்திரம் உதவியுடன், மழை நீரை வெளியேற்றும் பணி துவக்கப்பட்டது.